சம்மர் வெக்கேஷன் ஸ்டார்ட் ஆகிடுச்சு… குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான இந்த ஃபைண்டிங் நீமோ படத்தை மிஸ் செய்யாதீர்கள்
Finding Nemo Movie Is Streaming On Jio Hotstar: ஓடிடியில் 18 வயதிற்கு மேல் உள்ள பெரியவர்கள் பார்க்கும் படங்களைப் போல குழந்தைகளும், சிறுவர்களும் பார்க்கும் வகையில் பலப் படங்கள் உள்ளது. அந்த வகையில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த படத்தை தற்போது பார்க்கலாம்.

ஃபைண்டிங் நீமோ
அமெரிக்க அனிமேஷன் நகைச்சுவை நாடகம் பாணியில் வெளியானது ஃபைண்டிங் நீமோ படம். இந்தப் படம் கடந்த 2003-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமாதிரி அனிமேஷனில் வெளியான இந்தப் படம் அனைத்து மொழி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை ஆண்ட்ரூ ஸ்டாண்டன் இயக்கி இருந்த நிலையில் ஆண்ட்ரூ ஸ்டாண்டன், பாப் பீட்டர்சன் மற்றும் டேவிட் ரெனால்ட்ஸ் ஆகியோர் இணைந்து திரைக்கதையை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் தற்போது ஓடிடியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
அதன்படி இந்தப் படத்தில் மீண்களுக்கு குரல் கொடுத்தது முதல் சிலர் நடிகர்களும் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஆல்பர்ட் புரூக்ஸ்,
எலன் டிஜெனெரஸ், அலெக்சாண்டர் கோல்ட், வில்லெம் டஃபோ, பிராட் காரெட், ஆலிசன் ஜானி, ஸ்டீபன் ரூட், ஆஸ்டின் பெண்டில்டன், விக்கி லூயிஸ், ஜோ ரான்ஃப்ட், ஜெஃப்ரி ரஷ், ஆண்ட்ரூ ஸ்டாண்டன், எலிசபெத் பெர்கின்ஸ், நிக்கோலஸ் பேர்ட், பாப் பீட்டர்சன், பேரி ஹம்ப்ரீஸ், எரிக் பானா, புரூஸ் ஸ்பென்ஸ், ல் ஹண்டர், லூலூ எபெலிங், ஜோர்டி ரான்ஃப்ட், எரிகா பெக், எரிக் பெர் சல்லிவன், ஜான் ராட்சன்பெர்கர் ஆகியோ மீன்களுக்கு குரல் கொடுத்து உள்ளனர்.
ஃபைண்டிங் நீமோ படத்தின் கதை என்ன?
க்ளவுன் ஃபிஸ் என்ற மீன் வகையைச் சேர்ந்த ஜோடி முட்டைகளை இட்டுவிட்டு அந்த முட்டைகள் மீன்களாக மாறுவதற்காக காத்திருக்கின்னர். நூற்றுக்கணக்கான முட்டைகள் உடன் அந்த பெண் மீனை ஒரு பெரிய சுறா மீன் முழுங்கிவிடுகிறது. அதிலிருந்து தப்பித்து ஆண் க்ளவுன் மீன் முழித்துப் பார்த்த போது ஒரே ஒரு முட்டை மட்டும் தனியாக இருப்பதை பார்த்து அந்த முட்டையை பாதுகாத்து அது மீனாக மாறிய பிறகு நீமோ என்று பெயர் வைக்கிறது.
Also Read… ஜன நாயகன் பட கசிவால் விஜய் மற்றொரு படத்தில் நடிப்பாரா? எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்
அந்த நீமோ பள்ளிக்கு செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டு அங்கு சென்ற போது கடலுக்கு அடியில் வந்த ஒரு மனிதனால் பிடிக்கப்பட்டு கடலில் இருந்து தரையில் உள்ள ஒரு பல் மருத்துவமனையில் இருக்கு மீன் தொட்டியை வந்து சேர்கிறது. அந்த மீன் தொட்டியில் இருந்து மீண்டும் அது எப்படி தனது தந்தையுடன் சேர்ந்தது என்பதே இந்த ஃபைண்டிங் நீமோ படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?