துல்கர் சல்மன் – மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியானது ஆல்பம் பாடல்

Bheegi Bheegi Official Music Video Album: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது மகன் ஏ.ஆர். அமீன் இசையில் தற்போது ஆல்பம் பாடல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் மிருணால் தாக்கூர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

துல்கர் சல்மன் - மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியானது ஆல்பம் பாடல்

துல்கர் சல்மன் - மிருணாள் தாக்கூர்

Published: 

02 Feb 2026 16:48 PM

 IST

உலக அளவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார். பான் இந்திய அளவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மேலும் உலக அளவில் பெருமையாக பேசப்படும் ஆஸ்கர் என்ற விருது இரண்டினை வாங்கி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் பெருமைப் படுத்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் மற்றும் மகள்கள் இருவருமே இசைத் துறையிலேயே உள்ளனர். இந்த நிலையில் ஏ.ஆர்.அமீன் தனது தந்தை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு ஆல்பம் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

தொடர்ந்து இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் என பலரின் வாரிசுகள் தங்களை இசைத் துறையில் அறிமுகம் செய்ய ஆல்பம் பாடல்களை அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். அப்படி முன்னதாக பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணியின் மகனான சாய் அபயங்கர் ஆல்பம் பாடல்களை உருவக்கி அதன் மூலமாகவே மக்களிடையே தன்னை அதிக அளவில் பிரபலமாகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அவர் தற்போது தமிழ் சினிமாவில் மோஸ்ட் வாண்டர் இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

துல்கர் – மிருணாள் நடிப்பில் வெளியானது ஆல்பம் பாடல்:

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏ.ஆர்.அமீன் ஒரு ஆல்பம் பாடல் ஒன்றை பாடியுள்ளார். பீகி பீகி என்ற அந்த ஆல்பம் பாடலில் நடிகர் துல்கர் சல்மான் மற்றும்  நடிகை மிருணாள் தாக்கூர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்தப் பாடலின் வரிகளை பாடலாசிரியர் இர்ஷாத் கமில் எழுதியுள்ளார். மிகவும் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த ஆல்பம் பாடல் தற்போது வெளியாகி மக்களிடையே  கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஏப்ரல் மாதம் வெளியாகிறதா சூர்யாவின் கருப்பு படம்? வைரலாகும் தகவல்

ஏ.ஆர்.அமீன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:

Also Read… Sara Arjun: துரந்தர் படத்தை நிராகரித்த நடிகை.. சாரா அர்ஜுன் ரோலில் இந்த நடிகைதான் நடிக்கவிருந்தாரா?

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி