Theri Re-release: மீண்டும் வந்த விஜய் குமார் ஐ.பி.எஸ்… கவனம் பெரும் ‘தெறி’ பட ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்!

Theri Re-Release Trailer : தளபதி விஜய் மற்றும் அட்லீயின் கூட்டணியில் முதல் முறையாக உருவான படம்தான் தெறி. இப்படம் வெளியாகி 10 வருடமாக நிலையில், இந்த 2026ம் ஆண்டு ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் அதை முன்னிட்டு இப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு இப்படத்தின் ரீ-ரிலீஸ் ஸ்பெஷல் ட்ரெய்லர் பதிவை வெளியிட்டுள்ளார்.

Theri Re-release: மீண்டும் வந்த விஜய் குமார் ஐ.பி.எஸ்... கவனம் பெரும் தெறி பட ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்!

தெறி பட ட்ரெய்லர்

Published: 

18 Jan 2026 18:38 PM

 IST

கோலிவுட் சினிமாவில் உச்ச நாயகனாக இருப்பவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை மொத்தமாக 68 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் அவரின் நடிப்பில் வெளியான 59வது படம் தெறி (Theri). இப்படத்தை இயக்குநர் அட்லீ (Atlee) இயக்க, வி கிரியேஷன் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு (Kalaippuli S Thanu) தயாரித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் (GV.Prakash) இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியிருந்த நிலையில், விஜய்க்கு சிறந்த வெற்றி படமாக அமைந்திருந்தது. இந்த 2026ம் ஆண்டுடன் வெளியாகி 10 ஆண்டுகளை நெருங்கிய நிலையில், வரும் 2026 ஜனவரி 23 ஆம் தேதியில் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

இப்படத்தில் தளபதி விஜய், விஜய் குமார் ஐ.பி.எஸ் (Vijay Kumar IPS) வேடத்தில் நடித்திருந்த நிலையில், சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. இப்படத்தின் ரீ-ரிலீஸிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் மற்றும் வித்தியாசமான காட்சிகளுடன் வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஜாலியா இருந்த ஒருத்தன் படம் எப்போது ரிலீஸ் – ஹேப்பி நியூஸ் சொன்ன ஜீவா!

தெறி திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த் ரீ-ரிலீஸ் ட்ரெய்லர் காட்சிகளில், தெறி படத்தில் இடம்பெறாத சில காட்சிகளையும் படக்குழு இணைந்துள்ளது. இப்படத்தில் விஜய், ஐ.பி.எஸ். அதிகாரி மற்றும் பேக்கரி ஓனர் என இரு வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருந்தனர். மேலும் விஜய்யின் குழந்தை வேடத்தில் மீனாவின் மகள் நைனிகா மற்றும் விஜய்யின் மகள் திவ்யா சாஷா நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது கடந்த 2016ம் ஆண்டில் கிட்டத்தட்ட ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது.

இதையும் படிங்க: மீண்டும் பாலிவுட் பக்கம் திரும்பிய கீர்த்தி சுரேஷ்.. அட இந்த நடிகருக்கு ஜோடியாகவா?

இந்நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் இந்த படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும் நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் ரீ-ரிலீஸின்போதுதான் தல அஜித் குமாரின் மங்காத்தா படமும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த இரு படங்களும் 2026 ஜனவரி 23ம் தேதியில் காலை 9 மணி காட்சிகளுடன் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் இது தல மற்றும் தளபதி ரீ-ரிலீஸ் மோதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜன நாயகன் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் வெளியாகவில்லை, இந்நிலையில் ரசிகர்களின் ஆர்வத்திற்கு இணங்க தெறி படம் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘கழுத்தை அறுத்த சீன மாஞ்சா கயிறு’.. உயிர்தப்பிய மதபோதகர்..
51 ஆண்டுகளுக்கு முன் நடந்த திருட்டு சம்பவம்.. விடுதலை செய்யப்பட்ட நபர்..
பணம் பற்றாக்குறை காரணமாக காப்பீட்டு பிரீமியம் செலுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இதை செய்தால் போதும்..
"சொமேட்டோவில் நடக்கும் மோசடி சம்பவங்களை பகிர்ந்த சிஇஓ".. எச்சரிக்கை மக்களே!!