ரீ ரிலீஸாகும் தளபதி விஜயின் சிவகாசி படம் – எப்போது தெரியுமா?

Sivakasi Movie Re-release Update: தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சிவகாசி. இந்தப் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு தற்போது திட்டமிட்டுள்ளது.

ரீ ரிலீஸாகும் தளபதி விஜயின் சிவகாசி படம் - எப்போது தெரியுமா?

சிவகாசி

Published: 

08 Apr 2026 20:14 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த நபவம்பர் மாதம் 1-ம் தேதி 2005-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் சிவகாசி. ஆக்‌ஷன் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தை இயக்குநர் பேரரசு எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை அசின் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ், கீதா. லக்ஷனா, சகுந்தலா, ராஜேஷ், சரண்யா பொன்வண்ணன், வெங்கட் பிரபு, தேவன், பாபி, வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர், சிட்டி பாபு, கத்தரிக்கோல் மனோகர், ஜெயமணி, வேல்முருகன், கணேஷ் பாபு, எம்.ஜே. ஸ்ரீராம், பாஸ்கி, காதல் அருண் குமார், கஞ்சா கருப்பு, பெரிய கருப்பு தேவர், விஸ்வேஸ்வர ராவ், சாப்ளின் பாலு, பாவா லட்சுமணன், பரத், பட்டினப்பாக்கம் ஜெயராம், தேனி குஞ்சரம்மாள், எமி, வெண்பா, ராக்கி ராஜேஷ், சுமதி ஜி, நயன்தாரா, ஸ்ரீகாந்த் தேவா, அசோக் ராஜா, பேரரசு, ஜப்பான் குமார் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சூர்யா மூவிஸ் சார்பக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் தற்போது ரீ ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரீ ரிலீஸாகும் தளபதி விஜயின் சிவகாசி படம்:

சின்ன வயசுலேயே குடும்பத்திலிருந்து வெளியேறிய நடிகர் விஜய் பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தினரை தேடி செல்கிறார். அப்படி சென்ற இடத்தில் தனது அண்ணன் பிரகாஷ் ராஜ் அம்மா, தங்கை ஆகியோரை எந்த அளவிற்கு கொடுமை செய்கிறார் என்பதைப் பார்த்து என்ன செய்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் வருகின்ற 24-ம் தேதி ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Also Read… எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக வேலை கேட்டு சென்றேன் – பிரதீப் ரங்கநாதன்

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விக்னேஷ் சிவன் – நயன்தாரா காதல் தெரிந்தபோது பொறாமையாக இருந்தது – ஆர்.ஜே.பாலாஜி

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?