தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஒரு இன்பச் செய்தி.. ஜன நாயகன் படத்தில் ரிலீஸில் திருப்பம்!
Jana Nayagan Movie Release : தளபதி விஜய்யின் நடிப்பில் இறுதித் திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் ஜன நாயகன். இப்படமானது பல சிக்கல்களை சந்தித்துவந்த நிலையில், மறு-ஆய்வு குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்து தற்போது புதிய தகவல் ஒன்று வைரலாகிவருகிறது.

ஜன நாயகன்
தமிழில் பிரபல இயக்குநர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பிலும் தயாராகியுள்ள படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தில் தளபதி விஜய் லீட் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja Hegde) மற்றும் மகளாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கிறது. இப்படத்தின் வழக்கு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் நடந்த நிலையில், படக்குழு சார்பில் அளிக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் ரிவைசிங் கமிட்டிக்கு (Revising Committee) இப்படம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், வரும் 2026 மார்ச் 9ம் தேதியில் இப்படத்தை அவர்கள் பார்க்கிறார்களாம்.
இந்நிலையில் தற்போது ஜன நாயகன் படத்தின் ரிலீஸின் புது திருப்பம் வந்துள்ளது. அது என்னவென்றால் வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழு திட்டமிடுவதாக தகவல்கள் வைரலாகிவருகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜெய் – சுராஜ் வெஞ்சாரமூடு நடிக்கும் டெக்ஸ்லா.. வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!
ஜன நாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து வைரலாகும் பதிவு:
#JanaNayagan releasing on march 19 pic.twitter.com/vaTFAkQ7x6
— Movie Tamil (@_MovieTamil) March 7, 2026
ஜன நாயகன் படத்தின் உறுதியான ரிலீஸ் எப்போது இருக்கும் :
தற்போது ரிவைசிங் கமிட்டி ஜன நாயகன் படத்தை பார்ப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில், வரும் 2026 மார்ச் 9ம் தேதியில் பார்வையிடுகின்றனர். சென்சார் குழு படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டும், வசனங்கள் மியூட் செய்யப்பட்டும் மற்றும் பல மாற்றங்கள் செய்யப்பட்டபடியே, மாரு ஆய்வுக்குழுவிற்கு படக்குழு அனுப்பியுள்ளது. கிட்டத்தட்ட இப்படத்திற்கு 25 கட்ஸ் கொடுக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அதன்படி ஜன நாயகன் படத்தை ரிவைசிங் கமிட்டி பார்த்து கிட்டத்தட்ட 2 வாரங்களுக்குள் சென்சார் கிடைத்துவிடும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எனது வருங்கால கணவருக்கு அந்த விஷயங்கள் கட்டாயம் இருக்கவேண்டும் – மீனாட்சி சவுத்ரி போட்ட கண்டீஷன்!
அதன் காரணமாக 2026ம் ஆண்டு மார்ச் இறுதியில் சென்சார் கிடைக்க வாய்புள்ளதாம். இதற்கு மத்தியில் 2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலும் நடக்கவுள்ள நிலையில், இப்படம் தேர்தலுக்கு பிறகே வெளியாகும் என்று ஒருபுறம் சொல்லப்படுகிறது. சென்சார் விரைவில் கிடைத்துவிட்டால் 2026 மார்ச் 19ம் தேதியில் வெளியாகும், இல்லையென்றால் தேர்தலுக்கு பிறகே ஜன நாயகன் படமானது வெளியாகுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.