Jana Nayagan: லாஸ்ட் குட்டி ஸ்டோரி… தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட ‘இசைவெளியீட்டு விழா’ எப்போது? எங்கு நடைபெறுகிறது.. அறிவிப்பு இதோ!
Jana Nayagan Audio Launch: தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக இருப்பவர் தளபதி விஜய். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம்தான் ஜன நாயகன். இப்படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. இப்படத்தின் ஆடியோ லான்ச் எப்போது, எங்கு நடைபெறுகிறது என்பது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா
தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) கடைசி திரைப்படமாக மிக பிரம்மாண்ட கதைக்களத்தில் தயாராகிவருவதுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இந்த ஜோடி இப்படத்தின் மூலம் 2வது முறையாக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தமிழ் இயக்குநரான ஹெச்.வினோத் (H. Vinoth) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே அஜித் குமாரின் வலிமை மற்றும் துணிவு போன்ற ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தளபதி விஜய்யின் இந்த ஜன நாயகன் திரைப்படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இந்த படத்தை கே.வி.என். ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் (Anirudh) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடலான “தளபதி கச்சேரி” (Thalapathy Katcheri) இணையத்தில் ட்ரெண்டிங்லிஸ்டில் இருக்கிறது.
அந்த வகையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா (Jana Nayagan Audio launch) எப்போது என்பது தொடர்பான இணையத்தில் தகவல்கள் வைரலாகிவந்த நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஜன நாயகன் பட இசை வெளியீட்டு விழா வரும் 2025 டிசம்பர் 27 ஆம் தேதியில் மலேசியாவில் உள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியம், கோலாலம்பூரில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அமரன் பட திரையிடல்… சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட அமரன் படக்குழு!
ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டுவிழா குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு:
Malaysia, We are coming 😁#JanaNayaganAudioLaunch
▶️ https://t.co/HoZS9F9etB📍Bukit Jalil Stadium, Kuala Lumpur, Malaysia
See you on Dec 27, 2025 ❤️#Thalapathy @actorvijay sir @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss… pic.twitter.com/g1h1xNcEDP
— KVN Productions (@KvnProductions) November 21, 2025
தளபதி விஜய்யின் கடைசி குட்டி ஸ்டோரி :
பொதுவாக தளபதி விஜய் தனது படங்களின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வது வழக்கம் தான். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின்போது அவர் என்ன குட்டி ஸ்டோரி சொல்வார் அதற்காகவே ரசிகர்கள் காத்திருப்பார்கள் அந்த வகையில் சினிமாவில் இந்த ஜன நாயகன் படம் விஜய்யின் கடைசி படம் என கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்ததாக முழுமையாக அரசியலில் இறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசன் படத்தில் நடிக்கிறேனா? ரசிகர்களுக்கு ஆண்ட்ரியா சொன்ன சர்ப்ரைஸ் தகவல்!
ஜன நாயகன் விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த ஜன நாயகன் படத்தின் ஆடியோ லாஞ்சில் விஜய் சொல்லும் கடைசி குட்டி ஸ்டாரிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியானது மிக பிரம்மாண்டமாக மலேசியாவில் நடைபெறும் நிலையில், இந்நிகழ்ச்சியில் விஜய்யின் நண்பர்கள் முதல் சினிமாவில் பல்வேறு பிரபலங்களும் இணைந்து கலந்துகொள்ள வுள்ளதாக கூறப்படுகிறது. இது தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதால் சினிமாவில் ஃபேர்வெல் பார்ட்டி போல் இந்த நிகழ்ச்சி கொண்டாடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.