Jana Nayagan: பெரும் அதிர்ச்சியில் தளபதி ரசிகர்கள்.. இணையத்தில் லீக்கான ஜன நாயகன் பட 5 நிமிட காட்சி!
தமிழ் சினிமாவில் ஒட்டுமொத்த தளபதி விஜய்யின் ரசிகர்களின் எதிராப்பில் உள்ள திரைப்படம்தான் ஜன நாயகன். இப்படமானது சென்சார் பிரச்சனையின் காரணமாக வெளியாகாமல் இருந்தது. அந்த வகையில் தற்போது இப்படத்தின் 5 நிமிடம் கொண்ட தளபதி விஜயின் அறிமுக காட்சி லீக் ஆகியுள்ளது.

ஜனா நாயகன் கசிந்த வீடியோ
கோலிவுட் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை மொத்தம் 68 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் 69வது திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தை இயக்குநர் எச்.வினோத் (H Vinoth) இயக்க, கே.வி.என் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் தளபதி விஜய் போலீஸ் அதிகாரியாகவும், அரசியல்வாதியாகவும் நடித்துள்ளார். அந்த வகையில் இதில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde)நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் அரசியல் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை மையப்படுத்திய கதைக்களத்தில் தயாராகியுள்ளது. கடந்த 2026 ஜனவரி 9ம் தேதியில் இப்படம் வெளியாகவேண்டிய நிலையில், சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் வெளியிடப்படவில்லை.
அந்த விதத்தில் தற்போது இப்படத்திலிருந்து 5 நிமிட காட்சிகள் கொண்ட வீடியோ இணையத்தில் லீக் ஆகியுள்ளது. தளபதி விஜய்யின் கதாபாத்திர அறிமுகம் மற்றும் ஜன நாயகன் படத்தின் இன்ட்ரோ பாடல் தொடர்பான காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. தற்போது வெளியான இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தின் ‘மேக் வே ஃபார் தி கிங்’ தீம் பாடல் வெளியானது!
தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் காட்சிகள் லீக் தொடர்பாக இணையத்தில் பரவிவரும் பதிவு:
The film #JanaNayagan has the hard work of many people. Please do not share the leaked VIDEO that has been released.#ThalapathyVijay
— Movie Tamil (@_MovieTamil) April 9, 2026
இந்த லீட் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 5 நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த வீடியோவில், தளபதி விஜய்யின் இன்ட்ரோ காட்சி, ஜன நாயகன் படத்தின் ஒரு பேரே வரலாறு பாடல் தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இன்னும் சென்சார் கிடைக்காத காரணத்தாலும், தேர்தல் நேரம் நெருங்கிவிட்டதாலும் படம் இன்னும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்? வைரலாகும் தகவல்
இந்த படமானது ஒட்டுமொத்த தளபதி விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது இப்படத்தின் காட்ச்சிகள் லீக்கானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் காட்சிகள் லீக்கானது கருத்து படக்குழுவும் எரிச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஜன நாயகன் பட காட்ச்சிகளை பகிர்வோரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இன்னும் இதுகுறித்த எச்சரிக்கை பதிவை படக்குழு வெளியிடவில்லை.