கச்சேரி அப்புறம் ஆடலாம்… இப்போ கபடி ஆடலாமா – மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் கில்லி படம்!

Ghilli Movie Re-Release: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் முன்னதாக வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கில்லி. இந்தப் படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அது தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது.

கச்சேரி அப்புறம் ஆடலாம்… இப்போ கபடி ஆடலாமா - மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் கில்லி படம்!

கில்லி படம்

Published: 

16 Feb 2026 18:41 PM

 IST

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். தளபதி விஜய் நடிப்பில் உருவான இந்தப் படம் சென்சார் பிரச்சனை காரணமாக படம் வெளியாகாமல் தொடர்ந்து படம் தள்ளிபோய் கொண்டே இருக்கின்ற நிலையில் தளபதி விஜய் நடிப்பில் முன்னதாக வெளியான படங்கள் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கில்லி. ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் ட்ராமாவாக வெளியான இந்தப் படத்தை இயக்குநர் தரணி எழுதி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, தனிகெள பரணி, ஜானகி சபேஷ், ஜெனிபர், நாகேந்திர பிரசாத், தாமு, மாறன், ஆடுகளம் முருகதாஸ், சாப்ளின் பாலு, மயில்சாமி, பொன்னம்பலம், பாண்டு, வினோத் ராஜ் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்த கில்லி படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் தளபதி விஜயின் கில்லி படம்:

இந்தப் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரீ ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் ரீ ரிலீஸிலும் வசூல் சாதனை செய்தயாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கில்லி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி படம் வருகின்ற 20-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… இரண்டு ஆண்டுகளைக் கடந்தது மம்முட்டியின் மிரட்டலான நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த பிரமயுகம் படம்!

கில்லி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 6 வருடங்களை நிறைவு செய்த ஓ மை கடவுளே படம்… அசோக் செல்வன் குறித்து நெகிழ்ந்து பேசிய அஸ்வத் மாரிமுத்து

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு நேர்ந்த அவமானம்
திருமணத்துக்கு பிறகு சகோதரியின் காருக்கு பின்னால் 70 கி.மீ சைக்கிளில் சென்ற சகோதரன் - வைரலாகும் வீடியோ
பீகாரில் ரோஸ் டே கொண்டாடிய பெண்ணுக்கு எதிராக வழக்கு
ராம் சரணின் இரட்டை குழந்தைகளின் பெயர் என்ன தெரியுமா?