ஜன நாயகன் பட பிரச்சனை… வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்
Thalapathy Vijay Interview: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வெளியீட்டில் சிக்கலை சந்தித்துள்ள படம் ஜன நாயகன். இதுகுறித்து நடிகர் விஜய் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது வைரலாகி வருகின்றது.

தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணன் மற்றும் நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இறுதியாக நடிகர் விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் தமிழக அரசியலில் புதிய கட்சி ஒன்றை தொடங்கி தீவிர அரசியலி களம் இறங்க உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் இனி படங்களில் நடிக்கப்போவதில்லை என்று தெரிவித்து நடிகர் விஜய் தனது நடிப்பில் உருவாக உள்ள 69-வது படமான ஜன நாயகன் தான் இறுதிப் படம் என்று தெரிவித்தார். இந்தப் படத்திற்கு பிறகு தான் படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் வெளிப்படையாக தெரிவித்தார்.
இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் எச் வினோத் இயக்கி இருந்த நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா தயாரித்துள்ளார். படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தற்போதுவரை வெளியாகாமல் தொடர்ந்து தள்ளிப்போய்கொண்டே இருக்கின்றது.
தயாரிப்பாளரை நினைக்கையில் வேதனையாக இருக்கிறது:
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் தளபதி விஜய் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் என் அரசியல் பிரவேசத்தால் ‘ஜன நாயகன்’ திரைப்படம் பாதிக்கப்படுவதைப் பார்க்கும்போது, என் தயாரிப்பாளருக்காக எனக்கு வருத்தமாக இருக்கிறது. என் அரசியல் காரணமாகப் படங்கள் பாதிக்கப்படக்கூடும் என்று நான் எதிர்பார்த்தேன், அதற்காக மனதளவில் தயாராகவும் இருந்தேன் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… அரசன் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு எப்போது? அப்டேட் இதோ
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Q: Your film Jana Nayagan is stuck. Has politics affected your cinema career❓#ThalapathyVijay : I feel bad for my producer because #JanaNayagan is suffering due to my political entry🙁. I expected that films could get affected because of my politics and I was mentally prepared… pic.twitter.com/PP6pCtbCza
— AmuthaBharathi (@CinemaWithAB) January 30, 2026
Also Read… ரீ ரிலீஸாகும் சூப்பர் ஹிட் ஜோடி சூர்யா – ஜோதிகாவின் காக்க காக்க படம்