Jana Nayagan: போஸ்டர் அடி அண்ணே ரெடி.. தளபதி விஜய்யின் ஜன நாயகன் பட முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Jana Nayagan First Single Release: தமிழ் சினிமாவிலும், தமிழக மக்கள் நெஞ்சிலும் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்து வருபவர் தளபதி விஜய். இவரின் 69வது படமாக உருவாகிவருவது ஜன நாயகன். இப்படம் வரும் 2026ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

ஜன நாயகன் பட முதல் சிங்கிள்
தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களை வைத்திருப்பவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, அஜித் குமாரின் (Ajith Kumar) துணிவு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஹெச்.வினோத் (H. Vinoth) இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 110 நாட்களில் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்திருந்தது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegden) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி இந்த ஜன நாயகன் படத்தின் மூலம் 2வது முறையாக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சுமார் ரூ 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தை கன்னட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் (KVN Productions) நிறுவனம் தயாரித்துவருகிறது. மேலும் ராக்ஸ்டார் அனிருத் (Anirudh) இசையமைத்துவருகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், முதல் சிங்கிள் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஜன நாயகன் படத்தின் முதல் பாடல் வரும் 2025 நவம்பர் 8ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அஜித் ரெடண்ட் ரேஸிங்.. புதிய அணியை அறிமுகப்படுத்திய அஜித் குமார்.. வைரலாகும் பதிவு!
ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட அப்டேட் :
Thalapatheeee 🔥
Entryyy from Nov 8th #Thalapathy @actorvijay sir @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries #JanaNayagan#JanaNayaganPongal #JanaNayaganFromJan9 pic.twitter.com/ofhWzvzyRx— KVN Productions (@KvnProductions) November 6, 2025
இந்த ஜன நாயகன் படத்திற்கு அனிருத் இசையமைக்க, முதல் பாடலை தளபதி விஜய் தான் பாடியுள்ளாராம். மேலும் இந்த பாடலில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடனமாடும் காட்சிகளும் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருந்த நிலையில், கரூர் விவகாரம் தொடர்பாக இப்படத்தின் பாடல் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ‘அடி அலையே அலையே’… சிவகார்த்திகேயன்- ஸ்ரீலீலாவின் பராசக்தி பட முதல் பாடல் வெளியானது!
இந்நிலையில் தற்போது தளபதி விஜய் மீதும் களத்தில் இறங்கியிருந்த நிலையில், முதல் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புதான் தற்போது இணையதளம் முழுக்க வைரலாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 09ம் தேதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகவுள்ள நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.