தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்… மண்டாட்டி படத்தின் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய சூரி
Tamil New Year Special Poster For Mandaadi Movie: தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சூரி. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் மண்டாட்டி. இந்தப் படத்தின் புது போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

மண்டாடி
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து தற்போது நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூரி. சொந்த உழைப்பின் காரணமாக தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் சூரி. இவர் காமெடி நடிகராக பலப் படங்களில் நடித்து ரசிகர்களின் மணதில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் தற்போது நாயகனாக தொடர்ந்து கலக்கி வருகிறார். அதன்படி நடிகர் சூரி நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு தொடர்ந்து நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். காமெடி கதாப்பாத்திரங்களில் நடிக்கவில்லை. அதன்படி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தின் மூலமாக நடிகர் சூரி நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து கருடன், விடுதலை பாகம் இரண்டு மற்றும் மாமன் ஆகியப் படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
இறுதியாக நடிகர் சூரி நாயகனாக நடித்த மாமன் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்று வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் சூரி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் காமெடி மற்றும் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகி இருந்த நிலையில் இந்தப் படத்தின் திரைக்கதையை சூரி எழுதி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாமன் படத்தை தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடித்து வரும் படம் மண்டாடி.
மண்டாட்டி படத்தின் போஸ்டர் வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து கூறிய சூரி:
இந்த நிலையில் இந்த மண்டாட்டி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நடிகர் சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! கடல் சார்ந்த பிரம்மாண்டமான ஆக்ஷன் நாடகமான எங்கள் ‘மண்டாடி’ திரைப்படம், தற்போது படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. விறுவிறுப்பான புதிய தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளன என்றும் அந்தப் பதிவில் சூரி தெரிவித்து இருந்தார்.
நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Wishing everyone a Happy Tamil New Year — our grand sea-based action drama #Mandaadi is in its final stage of shooting. Exciting updates coming soon !!! 💥#Mandaadi @ActorSuhas @elredkumar #vetrimaaran @rsinfotainment @MathiMaaran @gvprakash @Mahima_Nambiar@RavindraVijay1… pic.twitter.com/xvm9i4aKwk
— Actor Soori (@sooriofficial) April 13, 2026
Also Read… Seyon: சிவகார்த்திகேயனின் சேயோன் பட ஷூட்டிங்கில் மாற்றம்? – வைரலாகும் தகவல்!