Coolie : ரஜினிகாந்த்தின் ‘கூலி’ – சிறப்புக் காட்சிகளுக்குத் தமிழக அரசு அனுமதி!
Coolie Movie Premiere Shows : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு தயாராகியுள்ள படம் கூலி. இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கி ஆணையை வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த்தின் கூலி
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் 6வது திரைப்படமாக உருவாகியிருப்பது கூலி (Coolie). இந்த படத்தில் முன்னணி நாயகனாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நடித்திருக்கிறார். இப்படமானது கடந்த 2023 ஆம் ஆண்டு ரஜினிகாந்த்தின் தலைவர்171 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. மேலும் தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துள்ளார். மொத்தத்தில் இந்த படமானது ஒரு பிரம்மாண்ட கூட்டணி திரைப்படமாக உருவாகியிருக்கிறது.
இதில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க, அவருடன் நாகார்ஜுனா, ஆமிர்கான், ஸ்ருதி ஹாசன், சவுபின் ஷாஹிர் மற்றும் சத்யராஜ் என பான் இந்திய மொழி பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படமானது நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியன்று, காலை 9 மணி பிரீமியர் காட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அன்று நள்ளிரவு 2 மணி வரையிலும் மொத்தமாக சுமார் 5 காட்சிகளை வெளியிடுவதற்கு மட்டும் அனுமதித்துள்ளது. கூலி படத்தின் முதல் நாள் ரிலீஸிற்கு மட்டுமே இந்த அனுமதி எனக் கூறப்படுகிறது. முதல் நாள் மட்டுமே , 24 மணி நேரத்தில் 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது .
இதையும் படிங்க : ரஜினிகாந்த்தின் ‘கூலி’ திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
கூலி சிறப்புக் காட்சிக்குத் தமிழக அரசு கொடுத்த அனுமதி பதிவு :
#Coolie Special GEO 👏🏻
“9AM special show permission given by the Tamil Nadu Government” pic.twitter.com/4ijGr0PDNl
— Movie Tamil (@MovieTamil4) August 12, 2025
மற்ற மாநிலங்களில் சிறப்பு காட்சிகள் எப்போது?
ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படமானது, தமிழகத்தைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் 2025 ஆகஸ்ட் 14 ஆம் தேதியில் அதிகாலை 6 மணி முதல் வெளியாகவுள்ளது. தெலங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் காலை 6 மணி காட்சிகள் முதல் வெளியாகிறது. மேலும் வட இந்திய மாநிலங்களான உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற இடங்களில் கூலி படமானது குறைவான திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏனென்றால் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி. ஆர் நடிப்பில் உருவாகியுள்ள வார் 2 படமும் வரும் 2025, ஆகஸ்ட் 14 ஆம் தேதியில்தான் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : திரைத்துறையில் 65 ஆண்டுகளை நிறைவு செய்தார் கமல்ஹாசன்!
டிக்கெட் ப்ரீ-புக்கிங் வசூல் விவரம்
இந்த படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங்கானது, தமிழகத்தில் கடந்த 2025, ஆகஸ்ட் 8 ஆம் தேதியில் இரவு 8 மணி முதல் தொடங்கியிருந்தது. இன்றுடன் சுமார் 4 நாட்களான நிலையில், தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் உலகளாவிய வசூலில் சுமார் ரூ 65 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலானது கோலிவுட் வட்டாரங்களில் பரவி வருகிறது.