இந்த சினிமா துறை அனைத்தையும் கற்றுக்கொடுக்கும்… தமன்னா ஓபன் டாக்

Tamannaah Bhatia talks about humility in industry: பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா பாட்டியா. இவரது நடிப்பில் படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தமன்னா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த சினிமா துறை அனைத்தையும் கற்றுக்கொடுக்கும்... தமன்னா ஓபன் டாக்

தமன்னா பாட்டியா

Published: 

24 Feb 2026 15:19 PM

 IST

தெலுங்கு சினிமாவில் கடந்த 2005-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ஸ்ரீ என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை தமன்னா பாட்டியா. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். இதில் அவர் நாயகியாக இல்லாமல் நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 2007-ம் ஆண்டில் வெளியான வியாபாரி என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து பலப் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். இறுதியாக இவரது நடிப்பில் ஓ ரோமியோ என்ற படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் நடிகை தமன்னா பாட்டியா நடிப்பில் புருஷன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படம் அடுத்ததாக தமிழ் சினிமாவில் நடிகை தமன்னா நடிப்பில் வெளியாக உள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஷால் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த சினிமா அனைத்தையும் கற்றுக்கொடுக்கும்:

இந்த நிலையில் நடிகை தமன்னா பாட்டியா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது சினிமா அனுபவம் குறித்து நடிப்பில் உருவாக உள்ள அடுத்தடுத்தப் படங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசினார். அது மட்டும் இன்றி சினிமா துறையைப் பற்றி பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்தத் துறை உங்களுக்கு மனத்தாழ்மையைக் கற்றுக்கொடுக்கிறது. நீங்கள் எவ்வளவு காலம் வேலை செய்தீர்கள் அல்லது எவ்வளவு சிறப்பாக வேலை செய்தீர்கள் என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், உங்கள் விதி மாறுகிறது, அதனுடன், மக்கள் உங்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதும் முக்கியம் என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Also Read… Thaai Kizhavi: கிராமப்புற கலக்கல் காமெடியில்.. வெளியானது ராதிகா சரத்குமாரின் ‘தாய் கிழவி’ பட ட்ரெய்லர்!

இணையத்தில் வைரலாகும் தமன்னாவின் பேச்சு:

Also Read… Samantha Ruth Prabhu: ‘என்னை நெகட்டிவ்வாக பேசினால் அதுதான் நடக்கும்’ – சமந்தா அதிரடி பேச்சு!

அமெரிக்காவில் 90 அடி ஆஞ்சநேயர் சிலைக்கு வலுக்கும் எதிர்ப்பு
கேமராவில் சிக்கிய அரிய வகை ஃபயர் டைகர் - அப்படி என்ன ஸ்பெஷல்?
ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி