ஓடிடியில் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற டாணாக்காரன் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது

4 Years Of Taanakkaran : தமிழ் சினிமாவில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் நேரடியாக ஓடிடியில் வெளியான படம் டாணாக்காரன். இந்த டாணாக்காரன் படம் ஓடிடியில் வெளியாகி இருந்தாலும் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஓடிடியில் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற டாணாக்காரன் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது

டாணாக்காரன்

Updated On: 

08 Apr 2026 18:40 PM

 IST

தமிழ் சினிமாவில் பொதுவாகவே காவல்துறையினர் குறித்து வரும் படங்களில் காவல்துறையினர் மக்களிடையே எவ்வளவு கடுமையாமகவும் இரக்கம் இல்லாமலும் நடந்துகொள்கிறார்கள் என்பது தொடர்பாக அதிக அளவில் பார்த்து இருப்போம். ஆனால் அதே துறையில் உயர் அதிகாரிகளால் கடைநிலையில் வேலை செய்யும் காவலர்கள் எந்த அளவிற்கு சிரமத்தை சந்திக்கிறார்கள் என்பதை மையமாக வைத்து உருவான படம் தான் டாணாக்காரன். இந்தப் படம் கடந்த 8-ம் தேதி ஏப்ரல் மாதம் 2022-ம் ஆண்டு வெளியானது. கொரோணா காலத்தின் இறுதிக்கட்டம் என்பதால் இந்தப் படத்தை படக்குழு நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியிட்டது. மேலும் இந்தப் படத்தை நடிகரும் இயக்குநருமான தமிழ் எழுதி இயக்கி இருந்தார். அவர் இந்தப் படத்தின் மூலமாகதான் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடித்து இருந்தார். அவருடன் இணைந்து நடிகர்கள் அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், மதுசூதன ராவ், லிவிங்ஸ்டன், பாவெல் நவகீதன், நிதிஷ் வீரா, கார்த்திக் கண்ணன், லிங்கேஷ், உதய் மகேஷ், மதன்குமார் தட்சிணாமூர்த்தி என பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி இருந்தாலும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படம் இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் வகையில் படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

சூப்பர் ஹிட் அடித்த டாணாக்காரன் படம் 4 ஆண்டுகளை நிறைவு செய்தது:

இந்தப் படத்தில் காவல்துறை ட்ரெய்னிங்கிற்காக செல்பவர்கள் எந்த அளவிற்கு எவ்வளவு கடுமையான கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக இந்தப் படத்தில் காட்டியிருப்பார்கள். படத்தின் இயக்குநர் தமிழ் முன்பு காவல்துறையில் பணியாற்றிய காரணத்தால் அவர் பார்த்த சம்பவங்களையும் அவருக்கு நடந்த விசங்களையும் மையமாக வைத்து இருந்தப் படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… எங்க திருமண வாழ்க்கை சுமூகமாக இருப்பதற்கு சீக்ரட் இதுதான் – ரகசியம் பகிர்ந்த சுந்தர் சி மற்றும் குஷ்பு!

டாணாக்காரன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகர் சங்கம் சிம்புவிற்காக போராட வேண்டும்… அரசன் படப்பிடிப்பு நிறுத்ததிற்கு டி.ராஜேந்தர் கண்டனம்

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?