Karuppa: அய்யா கருப்பனே வாருமையா…. அதிரடி இசையில் வெளியானது கருப்பு படத்தின் கருப்பா கூட வா பாடல்!
Karuppa Kooda Va Song: நடிகர் சூர்யாவின் நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமான கமர்ஷியல் படமாக தயாராகியுள்ளதுதான் கருப்பு படம். இப்படத்திலிருந்து தற்போது, கருப்பா கூட வா என்ற 4-வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி இசையில் தெய்வீகம் நிறைந்த இப்பாடல், தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

கருப்பா கூட வா பாடல்
கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் இருந்துவருபவர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji). இவர் இதுவரை 2 படங்களை இயக்கியுள்ள நிலையில், 3-வது மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இதில் உச்ச நாயகன் சூர்யா (Suriya) நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இந்த ஜோடியானது பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருப்பு படமானது ஆர்.ஜே.பாலாஜி இதுவரை இயக்கிய படத்திலிருந்து, மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இதில் சூர்யாவுடன் நடிகர்கள், திரிஷா, ஷிவதா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி, நட்டி நடராஜ் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் இப்படமானது வரும் 2026 மே 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மதுரையில் நடைபெற்றிருந்தது. அதில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், இப்படத்தின் பாடல்களை அனைத்தும் வெளியிட்டிருந்தார். அந்த வகையில் இன்று 2026 ஏப்ரல் 28ம் தேதியில், கருப்பு படத்திலிருந்து கருப்பா கூட வா என்ற புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான தெய்வீகம் நிறைந்த இப்பாடல், ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: லைசன்ஸ் இல்லாம பைக் ஓட்டி போலிஸ்கிட்ட மாட்டிக்கிட்டேன் – நடிகை சமந்தா சொன்ன சுவாரஸ்ய சம்பவம்
கருப்பா கூட வா பாடல் குறித்து கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
The fire, the emotion, the divinity – #KaruppaKoodaVa from #Karuppu out now.
A @SaiAbhyankkar Musical 💥
Lyrics : @pavijaypoet
Singers : #VMMahalingam & @SaiAbhyankkar #Karuppu blasting theatres worldwide this May 2026!@Suriya_offl… pic.twitter.com/fVUCRdNzIn— DreamWarriorPictures (@DreamWarriorpic) April 28, 2026
நடிகர் சூர்யாவின் ஒரு கிராமத்து கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்படமாக இந்த கருப்பு படமானது தயாராகியுள்ளது. இப்படத்தில் சூர்யா சரவணன் என்ற வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், திரிஷா காமாட்சி என்ற வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நெகடிவ் வேடத்தில் நடித்துள்ளார். இதில் சூர்யா கருப்பசாமியாகவும் நடித்துள்ள நிலையில், உணர்ச்சிகரமான காட்சிகள் நிரம்பியிருக்கும் என கூறப்படுகிறது. இந்த படமானது திரையரங்குகளில் நிச்சயமாக சிறப்பாக வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ராம் சரணின் ‘பெடி’ படத்தில் ஸ்பெஷல் பாடலில் நடனமாடும் கோலிவுட் நாயகி!
இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும், இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 2026 ஆண்டு மே 8ம் தேதி அல்லது 10ம் தேதியில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் நிலையில், சூர்யாவிற்கு வெற்றி திரைப்படமாக இது நிச்சயமாக அமையும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.