Karuppu: கருப்பு வேட்டை ஆரம்பம்… ஸ்பெஷல் போஸ்ட்டரை வெளியிட்ட சூர்யாவின் கருப்பு படக்குழு!
Karuppu Movie Special Poster: நடிகர் சூர்யாவின் நடிப்பில் 45வது திரைப்படமாக வெளியாக தயாராகியுள்ள திரைப்படம்தான் கருப்பு. இப்படமானது முற்றலும் ஆக்ஷன் மற்றும் தெய்வீகம் கலந்த கதையில் உருவாகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் 9 தினங்களே உள்ள நிலையில், ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கருப்பு
கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டில் சூர்யா45 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நடிகர் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கிவந்தார். அந்த வகையில் இந்த கருப்பு திரைப்படமானது முற்றிலும் தெய்வீகம் மற்றும் நீதியை மையமாக கொண்ட ஒரு பிரம்மாண்டமான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதில் சூர்யா ஆக்ஷன் நாயகனாக நடிக்க, அவருடன் ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணனும் (Trisha Krishnan) நடித்துள்ளார். இதில் சூர்யா மற்றும் திரிஷா இருவருமே வழக்கறிஞராகவே நடித்துள்ளனர். அந்த விதத்தில் இப்படமானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.
இப்படமானது 2026 மே 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளது. அந்த வகையில் தற்போது இப்படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. இதில் சூர்யா,பைக்கில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக ஸ்டண்ட் செய்வது போன்று அமைந்த நிலையில் ரசிகர்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: கருப்பு படத்தை எந்த வயதில் உள்ளவர்கள் எல்லாம் பார்க்கலாம்? வெளியானது சென்சார் அப்டேட்
சூர்யாவின் கருப்பு திரைப்படம் வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் குறித்த எக்ஸ் பதிவு:
Nine days to go before #Karuppu arrives to the big screens 🔥#Karuppu #VeeraBhadrudu releasing worldwide on the 14th of May 2026.
A @SaiAbhyankkar Musical 🎶 @Suriya_offl @trishtrashers @RJ_Balaji @dop_gkvishnu @prabhu_sr #Indrans @natty_nataraj #Swasika @SshivadaOffcl… pic.twitter.com/8PYckKujP4
— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 5, 2026
கருப்பு திரைப்படத்தை யாரெல்லாம் திரையரங்குகளில் பார்க்கலாம்:
சூர்யாவின் கருப்பு திரைப்படமானது 2026ம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவந்த படங்களில் ஒன்றாக இருக்கிறது. இதில் சூர்யா மற்றும் திரிஷாவின் ஜோடி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது. அந்த விதத்தில் நிச்சயம் இந்த ஜோடியானது ரசிகர்களால் மத்தியில் வரவேற்பை பெரும் என வட்டாரங்கள் கூறுகிறது. அந்த விதத்தில் இப்படத்திற்கு சென்சார் குழு, யு/ ஏ தரச் சான்றிதழை கொடுத்துள்ளது. அதன்படி கிட்டத்தட்ட 13 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், திரையரங்குகளில் சென்று இப்படத்தை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மண்டாட்டியில் நடிகர் சூரியின் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும்? வைரலாகும் தகவல்
இப்படமானது முற்றிலும் ஆக்ஷன் மற்றும் தெய்வீகம் கலந்த படமாக இருக்கும் நிலையில், நிச்சயம் சூர்யாவிற்கு வெற்றித் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் 2026 மே 14ம் தேதியில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது. அந்த வகையில் இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 2026 மே 6ம் தேதி அல்லது மே 8ம் தேதியில் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.