யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்தது விஸ்வநாத் & சன்ஸ் பட டீசர்

Vishwanath and Sons Movie Teaser gets 50 Million Views: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் அது அதிக அள்வில் பார்வைகளைப் பெற்றுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்தது விஸ்வநாத் & சன்ஸ் பட டீசர்

விஸ்வநாத் & சன்ஸ்

Published: 

24 Mar 2026 14:06 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் இதுவரை அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் முதலாவதாக கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ள நிலையில் வருகின்ற 14-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் கருப்பு படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.

இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்தப் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

50 மில்லியன் பார்வைகளைக் கடந்தது விஸ்வநாத் & சன்ஸ் பட டீசர்:

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்துள்ள நிலையில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அந்த டீசர் வீடியோ தற்போது யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதுகுறித்து படக்குழு ஒரு அறிவிப்பை தங்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… STR 51 படத்தில் சந்தானம் கேரக்டர் எப்படி இருக்கும் தெரியுமா? இயக்குநர் கொடுத்த அப்டேட்

விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவு:

Also Read… சல்மான் கானை இயக்கும் விஜய் பட இயக்குநர்? வைரலாகும் தகவல்

Follow Us
மாலத்தீவில் நடைபெற்ற படகு விபத்து ரேமண்ட் தலைவர் கௌதம் சிங்கானியா விபத்தில் காயம்
இந்திய பெருங்கடல் வரை பரவிய ஈரான் - இஸ்ரேல் போர்? அதிர்ச்சி தகவல்
மகளுக்காக பறவையைக் கொன்ற தந்தை - 8 மாத சிறை தண்டனை
அரபிக்கடலில் அனு ஆயுதம் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்திய பிரட்டன் - பரபரப்பு தகவல்