சூர்யா 46 படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதா? வைரலாகும் சூர்யாவின் போட்டோ

Actor Suriya: நடிகர் சூர்யா கருப்பு படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது அவரது 46-வது படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஹைதராபாத் ஷெடியுலை முடித்துவிட்டு நடிகர் சூர்யா சென்னை திரும்பியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

சூர்யா 46 படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதா? வைரலாகும் சூர்யாவின் போட்டோ

சூர்யா

Published: 

11 Sep 2025 11:16 AM

 IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா (Actor Suriya). இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் ரெட்ரோ. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா ரெட்ரோ லுக்கில் வந்து ரசிகர்களை சொக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல படத்தில் வந்த பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ரெட்ரோ படத்திற்கு முன்பாக மிகப் பெரிய எதிர்பார்ப்பில் சூர்யாவின் நடிப்பில் வெளியான கங்குவா படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதன் காரணமாகவே ரெட்ரோ படத்தின் வெற்றி சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நீண்ட ஆண்டுகளுக்குப் பின் சூர்யாவிற்கு கிடைத்த இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

ரெட்ரோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தனது கருப்பு படத்தில் முழு கவனம் செலுத்தி படப்பிடிப்பை முடித்துவிட்டார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. படம் நிச்சயமாக பண்டிகை நாளில் தான் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்து இருந்த நிலையில் முன்னதாக தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பொங்கல் பண்டிகைக்கே கருப்பு படம் வெளியாகும் என்றும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

சூர்யா 46 படத்தின் ஹைத்ராபாத் ஷெடியுலை முடித்த சூர்யா:

இந்த நிலையில் சூர்யா தனது 46-வது படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தில் ஹைத்ராபாத் ஷெடியுலை முடித்துவிட்டு நடிகர் சூர்யா சென்னை திரும்பியுள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. கருப்பு படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இந்தப் படம் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… நடிகர்களே பாட்டு பாடிட்டா சிங்கர்ஸ்க்கு வாய்ப்பு இல்லாம போகுதே – வைரல் பாடகர் சத்யன் சொன்ன விசயம்!

இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் போட்டோ:

Also Read… இயக்குநர் பிரேம் குமார் அடுத்ததா இயக்க உள்ளது இந்த மலையாள நடிகரைத்தான் – அவரே சொன்ன விசயம்!