Suriya: சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம்.. முதல் இரு படங்கள் இதுதான்!
Suriyas New Production House: கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூர்யா. இவர் நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இவர் மேலும் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதாக தகவல்கள வெளியாகிவருகிறது. மேலும் அந்த நிறுவனத்தின் கீழ் சூர்யாவின் நடிப்பில் 2 படங்கள் உருவாகாவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா
நடிகர் சூர்யாவின் (Suriya) முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ (Retro). இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். கடந்த 2025 மே 1ம் தேதியில் இந்த படமானது உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்திருந்தார். இந்த படத்தை சூர்யா 2டி என்டேர்டைமென்ட் (2D Entertainment) என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்திருந்தார். இந்நிலையில் நடிகர் சூர்யா மேலும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.
இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு “ழகரம்” (Zhakaram) என்ற பெயரை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும்தான் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருந்து வருகின்றனர்.
இந்த நிறுவனத்தைத் தொடர்ந்துதான் சூர்யா மட்டும் இந்த “ழகரம்” என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் கீழ் சூர்யா தனது அடுத்த 2 படங்ககளை தயாரிக்கவுள்ளாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கரூர் சோக சம்பவம்.. காந்தாரா படக்குழு செய்த விஷயம்!
நடிகர்சூர்யாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் :
நடிகர் சூர்யாவின் அடுத்த படங்கள்:
நடிகர் சூர்யா கருப்பு மற்றும் சூர்யா46 படங்களை தொடர்ந்து, மேலும் இரு படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா47 படமானது உருவாகுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நடிப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : AK64 படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி.. அஜித் குமார் கொடுத்த அப்டேட் இதோ!
இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்ததாக சூர்யாவின் 48வது படத்தை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குவதாக கூறப்படுகிறது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் நடிப்பில் தயாராகிவரும் படம் :
நடிகர் சூர்யா ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2026ம் ஆனதில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்ததாக சூர்யா, இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படமானது தற்காலிகமாக சூர்யா46 என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு படக்குழு விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் என டைட்டில் வைப்பதாக திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்து வருகிறார்.