Suriya 45 : சூர்யாவின் 45வது படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது? படக்குழு அதிரடி அறிவிப்பு!

Suriya45 Movie Title Update :இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் சூர்யா45. நடிகர் சூர்யாவின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில், அவருடன் திரிஷா இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் டைட்டில் இன்னும் வெளியாகாத நிலையில், வரும் 2025, ஜூன் 20ம் தேதி ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Suriya 45 : சூர்யாவின் 45வது படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது? படக்குழு அதிரடி அறிவிப்பு!

சூர்யா45 திரைப்படம்

Updated On: 

19 Jun 2025 19:02 PM

 IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி அதிரடி நாயகனாக இருந்து வருபவர் சூர்யா (Suriya). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ரெட்ரோ (Retro). இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் வெளியான இப்படமானது அருமையான வரவேற்பைப் பெற்று சுமார் ரூ 235 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடிகர் சூர்யா இணைந்த திரைப்படம்தான் சூர்யா45 (Suriya 45). இந்த திரைப்படத்தைத் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே .பாலாஜி (RJ.Balaji) இயக்கிவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பொள்ளாச்சியில் பூஜைகளுடன் தொடங்கியது. இந்த படமானது முற்றிலும் கிராமத்து ஆக்ஷ்ன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

சூர்யா மற்றும் திரிஷாவின் (Trisha) முன்னணி நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் 2025, ஜூன் 20ன் அன்று, இயக்குநர் ஆ.ஜே. பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிடத் திட்டமிட்டுள்ளது. 2025, ஜூன் 2ம் தேதியில் காலை 10மணி அளவில் படத்தின் டைட்டிலை வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு “வேட்டை கருப்பு” (Vettai Karuppu) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது உண்மையா என்று நாளை தெரியவரும்.

சூர்யா45 படக்குழு வெளியிட்ட டைட்டில் அறிவிப்பு பதிவு :

சூர்யா45 படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் என்ன..?

கிராமத்து ஆக்ஷ்ன் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த சூர்யா45 படத்தில், நடிகர் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்த ஜோடி சுமார் 20 வருடங்களுக்குப் பின் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

இவரும் இப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யா இந்த படத்திலும் வழக்கறிஞராகத்தான் நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவின் காட்சிகள் முழுமையாக படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சூர்யா45 படத்தின் ரிலீஸ் எப்போது :

இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ட்ரீம்ஸ் வாரியர் பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஆரம்பத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாவதாக இசையமைப்பாளராக ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமத்துக் கதைக்களத்துடன் கூடிய இப்படத்தைப் படக்குழு வரும் 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இப்படத்தின் ரிலீசை பற்றி படக்குழு எந்தவித அறிவிப்புகளையும் கொடுக்கவில்லை. இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டைத் தொடர்ந்து, இப்படத்தின் அடுத்தடுத்த தகவல்களும் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories
Suriya47: ஷூட்டிங்கிற்கு முன்னே சூர்யா47 படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்?
அதிக எதிர்பார்ப்பு.. ஆனால் தியேட்டரில் ஓடல.. 2025ல் எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியுற்ற படங்கள் இதுதான்!
karthi: வா வாத்தியார் பட கதை என்னை ரொம்பவே பயமுறுத்திடுச்சு.. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை- கார்த்தி ஓபன் டாக்!
Rathna Kumar: 29 படத்தின் கதை கூட லோகேஷ் கனகராஜிற்கு தெரியுமான்னு தெரியல.. கலகலப்பாக பேசிய இயக்குநர் ரத்ன குமார்!
Padayappa: போட அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்.. வெளியானது ‘படையப்பா’ பட ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்!
தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய டாப் 5 படங்கள் – லிஸ்ட் இதோ
குளிர்கால ஆடைகளை எப்படி ஃபேஷன் ஸ்டேட்மெண்டாக மாற்றுவது.. நடிகர்களின் தேர்வு என்ன?
சீனப் பெண்ணுக்கும் இந்திய இளைஞனுக்கும் நடந்த திருமணம்.. இணையத்தில் வைரலாகும் காதல் கதை..
25கிலோ மீட்டர் தான் தூரம்.. சகோதரனை ஹெலிகாப்டரில் வந்து அழைத்துச் செல்லும் சகோதரி!!
கோஹலி மற்றும் ரோகித் இல்லாமல், 2027 உலகக் கோப்பையை வெல்ல முடியாது - முகமது கைஃப்..