Suraj Venjaramoodu: ‘தனுஷ் ஒரு ஸ்டார் பெர்ஃபார்’.. புகழ்ந்து பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!

Suraj Venjaramoodu Praised Dhanush: மலையாள சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சுராஜ் வெஞ்சாரமூடு. இவர் தற்போது தமிழ் மொழி படங்களிலும் நடிக்க தொடங்கிய நிலையில், பிரபலமான நடிகராக, இருந்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், நடிகர் தனுஷின் நடிப்பு குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

Suraj Venjaramoodu: தனுஷ் ஒரு ஸ்டார் பெர்ஃபார்.. புகழ்ந்து பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!

தனுஷ் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு

Updated On: 

03 Mar 2026 15:05 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சுராஜ் வெஞ்சாரமூடு (Suraj Venjaramoodu). இவர் ஆரம்பகாலத்தில் மலையாள சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவந்த நிலையில், தற்போது பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் தற்போது தமிழ் சினிமாவிலும் படங்கள் நடிக்க தொடங்கிளியுள்ளார். கடந்த 2025ம் ஆண்டில் வெளியான வீர தீர சூரன் 2 (Veera Dheera Soooran 2) படத்தில் இவர் மிகவும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் பிரபலம் கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் நடிகர்கள் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் தனுஷ் (Dhanush) போன்ற நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 (Jailer 2) படம் மற்றும் தனுஷின் கர (kara) படத்திலும் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் கென் கருணாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள யூத் (Youth) படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் சுராஜ் வெஞ்சாரமூடு பேசியிருந்தார். அதில் அவர், நடிகர் தனுஷின் நடிப்பு குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: 3 நாட்களில் தாய் கிழவி படம் வசூலித்தது எத்தனை கோடிகள்? அப்டேட் இதோ

தனுஷின் நடிப்பு குறித்து புகழ்ந்து பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு:

அந்த நேர்காணலில் பேசிய நடிகர் சுராஜ் வெஞ்சரமொடு, அதில் “தனுஷ் சார் ஒரு ஸ்டார் நடிகர். அவர் தற்போது கமர்ஷியல் படங்கள் பண்ணுகிறார். மேலும் அவர் மரியான் மற்றும் அசிரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் கால்பதித்துள்ளார்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தனுஷின் கர படம் குறித்து நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு வெளியிட்ட பதிவு:

நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு தற்போது தமிழ் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டிவருகிறார். இவர் கென் கருணாஸ் இயக்கத்திலும், நடிப்பிலும் உருவாகியுள்ள யூத் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கென் கருணாஸின் தந்தையாகவும், நடிகை பிரியதர்ஷினியின் கணவனாகவும் இவர் நடித்துள்ளார். இப்படமானது வரும் 2026 மார்ச் 19ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. மேலும் இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: லோகேஷ் ஹீரோ ஆகிட்டாரு… நீங்க ஹீரோவா நடிப்பீங்களா? – அனிருத்தின் கியூட் ரிப்ளை

இதில் நெகடிவ் வேடத்தில் இவர் நடித்திருப்பதாக வட்டாரங்கள் கூறுகிறது. அதைப்போல விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கர படத்திலும் இவர் நெகட்டிவ் வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த் 2026ம் ஆண்டில் சுராஜ் வெஞ்சாரமூடு நடிப்பில் மட்டும் தமிழில் 3 படங்களுக்கும் மேல் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ