கமல் ஹசனின் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

Thug Life Movie: நடிகர் கமல் ஹசனின் நடிப்பில் வெளியாகியுள்ள தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் உள்ள திரையரங்குகளில் வெளியிட தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு கர்நாடகா அரசு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கமல் ஹசனின் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்

தக் லைஃப்

Published: 

17 Jun 2025 13:16 PM

நடிகர் கமல் ஹாசன் (Actor Kamal Haasan) கன்னட மொழி குறித்து பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து கர்நாடகாவில் தக் லைஃப் படம் உரிய நேரத்தில் வெளியிட முடியாமல் போனது. இந்த நிலையில் இதுகுறித்து படக்குழு உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) வழக்கு தொடர்ந்ததைத் தொடர்ந்து அந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிமன்றம் தற்போது வழங்கியுள்ளது. அதன்படி உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில் கூறியுள்ளதாவது, கர்நாடக மாநிலத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தை வெளியிட தடை விதிக்க முடியது என்று தெரிவித்துள்ளது. மேலும் உரிய சான்றிதழ்களைப் பெற்ற பிறகு எந்த ஒரு படத்தையும் யாருக்கும் தடை செய்ய உரிமை இல்லை என்றும் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகும் திரையரங்குகளில் உரிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சர்ச்சையை கிளப்பிய கமல் ஹாசனின் பேச்சு:

நடிகர் கமல் ஹாசன் தக் லைஃப் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாக நடைப்பெற்ற இசை வெளியீட்டு விழாவில் கன்னட மொழி குறித்து பேசினார். அதில் தமிழில் இருந்து தான் கன்னட மொழி பிரிந்து சென்றதாக தெரிவித்தார். இது கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் கன்னட மொழி ஆர்வளர்களும் கர்நாடகாவில் உள்ள அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் என பலரும் கமல் ஹாசனுக்கு எதிராக பேசினர். மேலும் கமல் ஹாசன் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இல்லை என்றால் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியிட முடியாது என்று மிரட்டல் விடுத்தனர்.

உயர் நீதிமன்றம் மறுத்த தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம்:

இந்த சர்ச்சைகளுக்குப் பிறகு முதலில் தக் லைஃப் படக்குழு கர்நாடகா உயர் நீதிமன்றத்தை நாடியது. ஆனால் அங்கு சமரச பேச்சுவார்த்தை நடத்தவும் மன்னிப்பு கேட்டாள் சரியாகிவிடும் என்றும் கூறியதால் படக்குழு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதன் காரணமாக தக் லைஃப் படம் உரிய நேரத்தில் கர்நாடகாவில் வெளியாகவில்லை.

இதனைத் தொடர்ந்து இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உரிய சான்றிதல் பெற்ற படத்தை ஏன் வெளியிட முடியவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் படம் வெளியிடும் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க கர்நாடக அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

முத்தமழை பாடல் வீடியோவை வெளியிட்ட தக் லைஃப் படக்குழு:

Related Stories
பிளாக் மெயில் முதல் சரண்டர் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
இனி ஃபேமிலி செண்டிமெண்ட்லாம் ஹிட்டடிக்கதுனு நீ சினிமாவை விட்டு போ சொன்னாங்க – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!
பண மோசடி வழக்கில் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன்…. ‘கிங்டம்’ பட நிகழ்வில் விஜய் தேவரகொண்டா உருக்கம்!
திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் தலைவன் தலைவி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்!
எந்த பின்னணியும் இல்லாமல் வரும் பல நடிகர்களுக்கு சிவகார்த்திகேயன் ஒரு எடுத்துக்காட்டாக மாறிவிட்டார் – ஏ.ஆர்.முருகதாஸ்