ஆன்மீக சுற்றுழா சென்றுள்ள ரஜினிகாந்த் – இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்
Super Star Rajinikanth: சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு முறையாவது ஆன்மீக சுற்றுழா பயணம் செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அவர் இமையமலைக்கு ஆன்மீக சுற்றுழா பயணம் சென்றுள்ளார். அங்கு அவர் ரசிகர்களுடன் எடுத்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ரஜினிகாந்த்
கோலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் (Actor Rajinikanth). இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் பான் இந்திய நட்சத்திரங்கள் பலர் நடித்து படத்தை உலக அளவில் ஹிட் ஆக்கினர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு அடுத்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஆன்மீக சுற்றுழா பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் 2-ம் பாகம் படப்பிடிப்பில் பிசியாக நடித்து வந்தார். இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகளும் தொடர்ந்து விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஆன்மீக சுற்றிழாவில் இருக்கிறார். அங்கு ரசிகர்களுடன் ரஜினிகாந்த் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆன்மீக சுற்றுழா சென்றுள்ள ரஜினிகாந்த்:
ஒவ்வொரு வருடமும் நடிகர் ரஜினிகாந்த் இமையமலைக்கு செல்வது வழக்கம். அப்படி இந்த ஆண்டில் தற்போது இமையமலைக்கு ஆண்மீக சுற்றுழா சென்றுள்ளார். தொடர்ந்து அங்கு ரசிகர்களுடன் அவர் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அது மட்டும் இன்றி அவர் ரோடு கடைகளில் நின்று உணவு உண்ணும் புகைப்படங்களும் தொடர்ந்து வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… சிம்புவிற்கு அரசன் படத்தில் வில்லனாகும் கன்னட நடிகர் – வைரலாகும் தகவல்
இணையத்தில் கவனம் பெறும் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் போட்டோ:
மகா அவதார் பாபாஜி குகை தரிசனமும் தியானமும் முடித்து உற்சாகமாக தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் @rajinikanth #thalaivar #superstar pic.twitter.com/8KmT7rpu5w
— RBSI RAJINI FAN PAGE (@RBSIRAJINI) October 9, 2025
Also Read… கவின் – நயன்தாராவின் Hi படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!