தக் லைஃப் படத்திலிருந்து வெளியானது சுகர் பேபி பாடலின் லிரிக்கள் வீடியோ!
Sugar Baby Song Lyrical Video | இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்திலிருந்து சுகர் பேபி பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலான நிலையில் தற்போது இரண்டாவது பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam) இயக்கத்தில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் தக் லைஃப். இந்தப் படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் நாயகன்களாக நடித்துள்ளனர். நாயகன் படத்திற்கு பிறகு கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் 36 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படம் வெளியாக உள்ளதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் இதுவரை நடித்திராத ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகை அபிராமி நடிகர் கமல் ஹாசனின் மனைவியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். முன்னதாக இவர்கள் இணைந்து நடித்த விருமாண்டி படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தக் லைஃப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், சான்யா மல்கோத்ரா என பலர் நடித்துள்ளனர்.
இந்த மே மாதம் தொடங்கியதில் இருந்தே படத்தில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றது. முன்னதாக படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அதனைத் தொடர்ந்து படத்திலிருந்து ஜிங்குச்சா என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை வெளியிட்டனர். அது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 17-ம் தேதி 2025-ம் ஆண்டு தக் லைஃப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டது. இந்த ட்ரெய்லரில் நடிகர் கமல் ஹாசனுக்கு வளர்ப்பு மகனாக நடிகர் சிலம்பரசன் நடித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அபிராமி கமல் ஹாசனின் மனைவியாகவும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் கமல் ஹாசனின் காதலியாகவும் நடித்துள்ளது தெரிய வந்துள்ளது.
தக் லைஃப் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#SugarBaby Out Now
➡️ https://t.co/DnLvjsQRqN #ThuglifeAudioLaunch from May 24#Thuglife #ThuglifeFromJune5 #KamalHaasan #SilambarasanTR #IMAX
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan… pic.twitter.com/XPU7Ttxky6— Raaj Kamal Films International (@RKFI) May 21, 2025
தக் லைஃப் படம் வருகின்ற 5-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் வீடியோ வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 24-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு அன்று நடைப்பெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது.