பராசக்தி படத்தில் ராணாவின் ரோலை அந்த நடிகர் பண்ணவேண்டியது.. சுதா கொங்கரா ஓபன் டாக்!

Director Sudha Kongara Interview: பராசக்தி திரைப்படமானது அடைந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் பான் இந்திய முழுவதும் வெளியாகியிருந்தது. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்த நிலையில், சிவகார்திகேயன் நடித்திருந்தார். இப்படத்தில் சிறப்பு வேடத்தில் அந்த நடிகரை நடிக்கவைக்க அணுகியதாக சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். அது யாரை என பார்க்கலாம்.

பராசக்தி படத்தில் ராணாவின் ரோலை அந்த நடிகர் பண்ணவேண்டியது.. சுதா கொங்கரா ஓபன் டாக்!

சுதா கொங்கரா

Published: 

20 Jan 2026 20:46 PM

 IST

தென்னிந்திய சினிமாவில் இயக்குநராக வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi). இப்படத்தில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan), ரவி மோகன் (Ravi Mohan), ஸ்ரீலீலா (Sreeleela), அதர்வா (Athrvaa), ராணா,பேசில் ஜோசப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது பொங்கால் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் வெளியானது. காதல் மற்றும் இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான போராட்டம் என இப்படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. இந்த படமானது எதிர்பாத்து அளவிற்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெறவில்லை.

முதல் முதலில் புறநானூறு (Purananooru) என அறிவிக்கப்பட்ட இப்படத்தில் சூர்யா (Suriya) கதாநாயகனாக நடிக்கவிருந்தார். பின் அவர் சில காரணங்களால் இப்படத்திலிருந்து விலகிவிட்டார். இதையடுத்து சிவகார்த்திகேயன் இப்படத்தின் கதையை கேட்டு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யாவை அடுத்ததாக இந்த பராசக்தி படத்தின் கதையை பிரபல தெலுங்கு நடிகரை வைத்து எடுக்க அவரை அணுகியதாக சுதா கொங்கரா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அந்த பிரபலம் வேறு யாருமில்லை விஜய் தேவரகொண்டா தான் (Vijay Deverakonda).

இதையும் படிங்க: மங்காத்தா படத்தில் இருந்து BTS புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு

பராசக்தி படத்தில் நடிக்க தெலுங்கு நடிகரை அணுகியது குறித்து சுதா கொங்கரா பேச்சு:

பராசக்தி பட ரிலீசிற்கு பின் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சுதா கொங்கரா. அதில் “பராசக்தி படத்தில் ராணா நடித்த வேடத்திற்கு முதலில் நான் விஜய் தேவரகொண்டவைதான் அணுகியகியிருந்தேன். அவர் அப்போது கிங்டம் பட ஷூட்டிங்கில் பிசியாக இருந்தார். அதனால் அவரால் இப்படத்தில் நடிக்கமுடியவில்லை. இந்த பராசக்தி படத்தை நான் பான் இந்திய படமாக உருவாக்க திட்டமிட்டிருந்தேன்” என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாயகன்கள் அப்படி செய்யும்போது வருத்தமாக உள்ளது – நடிகை பாவனா ஓபன் டாக்

இந்நிலையில் பராசக்தி படத்தில் ராணாவுக்கு முன் விஜய் தேவரகொண்டவையே இயக்குநர் சுதா கொங்கரா அணுகியுள்ள நிலையில், அதை அடுத்தக்கதான் ராணாவிடம் இப்படத்தின் கதையை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பராசக்தி படத்தில் விஜய் தேவரகொண்டாவை நடிக்கவைக்க நினைத்தது குறித்து சுதா கொங்கரா பேசிய பதிவு :

சிவகார்த்திகேயனின் பராசக்தி படமானது வெளியாகி கிட்டத்தட்ட 10 நாட்களை கடந்துள்ளது. இப்படத்தில் 3 நடிகர்கள் இணைந்து நடித்திருந்த நிலையில், எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை அடுத்ததாக வெளியான ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் என்ற படமானது மக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் அதிரடியாக உயர்ந்த சமையல் எண்ணெய்.. கடும் அவதியில் மக்கள்..
புஷ்பானா ஃபயர்! புஷ்பா 2 புரமோஷனுக்காக ஜப்பானில் அல்லு அர்ஜுன்
உரிமையாளரை காப்பாற்ற புலியுடன் போராடி உயிர் தியாகம் செய்த நாய்.. நெகிழ்ச்சி சம்பவம்..
3 நாகப் பாம்புகள் உடன் மருத்துவமனைக்கு வந்த நபர்.. பீகாரில் நடந்த பரபரப்பு சம்பவம்..