பராசக்தி ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர்கள் கூறுவார்கள் – இயக்குநர் சுதா கொங்கரா
Sudha Kongara about Parasakthi Movie: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பராசக்தி. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது இயக்குநர் சுதா கொங்கராவின் பேட்டியின் மூலம் தெளிவாக தெரிந்துள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகின்றது.

பராசக்தி
தமிழ் சினிமாவில் இந்த 2025-ம் ஆண்டு பெரிய அளவில் முன்னணி நடிகர்களின் படங்களில் வெளியாகவில்லை என்றாலும் தொடர்ந்து அவர்களின் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது. மேலும் 2026-ம் ஆண்டு தொடங்கும் போதே தொடர்ந்து பல பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் பலரின் படங்கள் ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் மட்டும் ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் ஜன நாயகன் மற்றும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி ஆகியப் படங்கள் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் வருகின்ற 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் பராசக்தி படம்14-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பராசக்தி ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர்கள் கூறுவார்கள்:
அதில் சுதா கொங்கரா கூறியதாவது, தயாரிப்பாளர்கள் விரைவில் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். ஒரு விஷயம் மட்டும் உறுதி. ‘பராசக்தி’ பொங்கல் வெளியீடாக வரவிருக்கிறது. இது ஒரு அரசியல் திரைப்படத்தை விட, இரண்டு சகோதரர்கள், அவர்களின் பயணம், மற்றும் சமூகப் பிரச்சினைகள் அவர்களின் வாழ்க்கையை எப்படி வடிவமைக்கின்றன என்பதை மையமாகக் கொண்ட ஒரு ஆழமான உணர்ச்சிகரமான குடும்ப நாடகம்.
ரவி மோகன் ஒரு வழக்கமான வில்லன் அல்ல. அவருடைய உலகத்தில், அவரே கதாநாயகன். அவர் இந்த பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. ‘இறுதிச் சுற்று’ படத்தில் மாதவனின் கதாபாத்திரம் போலவே, இவருடைய கதாபாத்திரத்தின் பயணமும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நடிகை சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
Also Read… பூக்கி படத்திலிருந்து வெளியானது லவ் அட்வைஸ் வீடியோ பாடல்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#SudhaKongara on #Parasakthi Release ✨
— The producers will officially announce the release date soon. One thing is certain — Parasakthi is locked for a Pongal release 🤝🔥
— More than a political film, it’s a deeply emotional family drama centered on two brothers, their… pic.twitter.com/DHLzGfgP58— Movie Tamil (@_MovieTamil) December 21, 2025