பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

The Raja Saab: தெலுங்கு சினிமா மட்டும் இன்றி பான் இந்தியா சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான கல்கி படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அடுத்ததாக தி ராஜா சாப் படம் வெளியாக காத்திருக்கின்றது,

பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

தி ராஜா சாப்

Published: 

28 May 2025 16:45 PM

 IST

தெலுங்கு சினிமா மட்டும் இன்றி பான் இந்தியா சினிமாவில் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் பிரபாஸ் (Actor Prabhas). கடந்த 2002-ம் ஆண்டு ஜெயந்த் சி இயக்கத்தில் வெளியான ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகரகாக அறிமுகம் ஆனவர் பிரபாஸ். அதனைத் தொடர்ந்து வருடத்திற்கு இரண்டு படங்களாவது தொடர்ந்து நடித்து வருகிறார் பிரபாஸ். 2014-ம் ஆண்டு வரை தெலுங்கு சினிமாவில் மட்டும் முன்னணி நடிகராக இருந்த நடிகர் பிரபாஸ் 2015-ம் ஆண்டு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி: தி பிகினிங்ஸ் என்ற படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் ரசிகர்களைப் பெற்றார் நடிகர் பிரபாஸ். இந்தப் படம் இந்தியா மட்டும் இன்றி உலக அளவில் உள்ள ரசிகர்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. முதல் பாக இறுதியில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வியுடன் படம் முடிந்ததால் இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் படம் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸின் தி ராஜா சாப் ரிலீஸ் எப்போது?

இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் தி ராஜா சாப். இந்தப் படத்தை இயக்குநர் மாருதி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து நடிகர்கள் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார், சஞ்சய் தத், முரளி ஷர்மா, அனுபம் கெர் என பலர் நடித்துள்ளனர்.

நடிகர் பிரபாஸின் இன்ஸ்டா பதிவு:

பீப்பில் மீடியா கம்பெனி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் காதல் நகைச்சுவை திகில் படமாக உருவாகி வருகிறது. படம் குறித்து தொடர்ந்து அப்டேட்டை படக்குழு வெளியிட்டு வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படம் டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பிரபாஸின் நடிப்பில் வரவிருக்கும் படங்கள்:

பிரபாஸின் நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டு மட்டும் இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அந்த வகையில் தி ராஜா சாப் மற்றும் கண்ணப்பா இந்த ஆண்டு வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது 2026-ம் ஆண்டு ஃபௌஜி படமும் அதனைத் தொடர்ந்து முன்னதாக நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார்: பகுதி 1 – போர் நிறுத்தம் படத்தின் இரண்டாம் பாகமான சாலார்: பகுதி 2 – சௌரியங்க பர்வம் படம் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
கர படத்தில் மமிதா பைஜுவின் கதாப்பாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் – இயக்குநர் விக்னேஷ் ராஜா
சூர்யாவின் அந்தப் படம் வாழ்க்கையைப் பற்றி எனது முழு கண்ணோட்டத்தையும் மாற்றியது – இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
நிஜ வாழ்க்கையிலும் பாரு என்னிடம் நடிப்பதாகவே எனக்கு இப்போதும் தோன்றுகிறது – விஜய் சேதுபதி
இயக்குநராக நான் இயக்கிய படங்களைவிட கருப்பு 15 மடங்கு பெரிய படம் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி
கர படம் பத்தோடு பதினொன்னா இருக்காது – இயக்குநர் விக்னேஷ் ராஜா
Silambarasan: என்ன வெயிட் போடா சொன்னாங்க.. அந்த படத்தில் நான் நடிக்கமாட்டேனு சொன்னே – சிலம்பரசன் உடைத்த உண்மை!
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..