சூர்யா 46 படம் எந்த மாதிரியான கதை? இணையத்தில் வைரலாகும் தகவல்

Suriya 46: நடிகர் சூர்யா கருப்பு படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு அடுத்ததாக அவரது 46-வது படத்தின் படப்பிடிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் கதை எந்த மாதிரியானதாக இருக்கும் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சூர்யா 46 படம் எந்த மாதிரியான கதை? இணையத்தில் வைரலாகும் தகவல்

சூர்யா 46

Published: 

12 Oct 2025 14:36 PM

 IST

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் இருந்த போது நடிகர் சூர்யா தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் இயக்குநர் வெங்கி அட்லூரி (Director Venky Atluri) உடன் இணைந்து படம் செய்ய உள்ளதாக தெரிவித்தார். இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக நடிகர் சூர்யாவின் ரசிகர்களிடையே இந்த செய்தி உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து ரெட்ரோ படத்தின் வெளியீட்டிற்கு பிறது சூர்யா அவரது 45-வது படமான கருப்பு படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக நடித்து வந்தார். இந்த கருப்பு படத்தின் பணிகளில் பிசியாக இருந்த போதே சூர்யாவின் 46-வது படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கினர்.

அதன்படி படம் பூஜையுடன் தொடங்கிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இவர் மூன்றாவது முறையாக இயக்குநர் வெங்கி அட்லூரியின் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி வாத்தி படத்தில் தொடர்ந்த இந்த கூட்டணி தொடர்ந்து லக்கி பாஸ்கர் தற்போது சூர்யா 46 படத்திலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யா 46 படத்தின் கதை எப்படி இருக்கும்?

இந்தப் படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. படம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி படம் ஒரு பக்கா தெலுங்கு ஃபேமிலி செண்டிமெண்டாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் இந்தப் படம் அதிகமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பர்த்டே பாய் நிவின் பாலியின் ஓம் சாந்தி ஓஷானா படத்தை பார்த்து இருக்கீங்களா? அப்போ மிஸ் செய்யாமல் பாருங்க

சூர்யா 46 படக்குழு முன்னதாக வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Harish Kalyan: ‘அந்த காட்சியில் அழுகை வந்துடுச்சு’.. வெளிப்படையாக பேசிய ஹரிஷ் கல்யாண்!