விறுவிறுப்பாக நடைபெறும் தலைவர் 173 படத்தின் பணிகள்… சமீபத்திய அப்டேட் என்ன தெரியுமா?

Superstar Rajinikanth will appear new get up in Thalaivar 173 Movie: தமிழ் சினிமாவில் 70 வயதைக் கடந்தும் பிசியாக நடித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள தலைவர் 173 படம் குறித்து தொடர்ந்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றது.

விறுவிறுப்பாக நடைபெறும் தலைவர் 173 படத்தின் பணிகள்... சமீபத்திய அப்டேட் என்ன தெரியுமா?

ரஜினிகாந்த் மற்றும் சிபி சக்ரவர்த்தி

Published: 

23 Mar 2026 10:48 AM

 IST

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களுக்கு போட்டியாக தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வருடத்திற்கு ஒரு படமாவது திரையரங்குகளில் வெளியாகி வருவது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் டீ ஏஜிங் மூலம் 80களில் வலம் வந்த ரஜினிகாந்தைப் பார்த்து ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

தொடர்ந்து பிசியாக நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் தலைவர் 173 மற்றும் தலைவர் 174 படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாக உள்ள தலைவர் 173 படத்தில் நடிக்க உள்ளார்.

தலைவர் 173 படத்தில் ரஜினிகாந்திற்கு இந்தனை கெட்டப்களா?

‘தலைவர் 173’ திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு பிரத்யேகமான புதிய கெட்டப்பில் தோன்றவுள்ளார். இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, ஒரு வடிவமைப்பாளருடன் இணைந்து 83 விதமான கெட்டப்புகளை உருவாக்கியுள்ளார்; இவற்றில் 3 தோற்றங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த கெட்டப்புகள் ரஜினிகாந்த் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு, படத்திற்கான இறுதி கெட்டப் எது என்பதை அவர் தீர்மானிப்பார் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் எந்த கெட்டப்பை தேர்வு செய்வார் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்ற்னர்.

Also Read… OTT Movie: கடைசி 30 நிமிடங்கள் கண்ணீரில் கலங்கடிக்கும்.. ஓடிடியில் வெளியான Couple Friendly எப்படி இருக்கு?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… R Madhavan: எனக்கு மிகவும் பெருமையளிக்கிறது.. அல்லு அர்ஜுனுக்கு நன்றி தெரிவித்த ஆர்.மாதவன் பதிவு!

Follow Us
Related Stories
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..