சல்மான் கானை இயக்கும் விஜய் பட இயக்குநர்? வைரலாகும் தகவல்

Salman Khan will next be seen in a film directed by Vamshi Paidipally : பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்த அப்டேட் தற்போது உருவாகி உள்ளது.

சல்மான் கானை இயக்கும் விஜய் பட இயக்குநர்? வைரலாகும் தகவல்

சல்மான் கான்

Published: 

23 Mar 2026 15:44 PM

 IST

பாலிவுட் சினிமாவில் கடந்த 1988-ம் ஆண்டு முதல் நடிக்கத் தொடங்கினார் சல்மான் கான். இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கியப் பிறகு இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகர் சல்மான் கான் இறுதியாக நடித்தப் படம் சிக்கந்தர். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி இயக்கியப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் பல விமர்சனங்களைப் பெற்றார். இந்த நிலையில் சல்மான் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ள நிலையில அடுத்ததாக அவரது படத்தை எந்த இயக்குநர் இயக்க உள்ளார் என்பது குறித்து தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அதன்படி தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வம்சி பைடிபைலி. இவரது இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீஇதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற வாரிசு படத்தை இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சல்மான் கானை இயக்கும் விஜய் பட இயக்குநர்?

அதன்படி இயக்குநர் வம்சி பைடிபைலி நடிகர் சல்மான் கானை வைத்து அடுத்ததாக படத்தை இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பாக தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகின்ற ஏப்ரல் மாதம் 2026-ம் ஆண்டு முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ViRosh: திருமணத்திற்கு அழைக்கவில்லை என வீடியோ போட்ட கியூட் சிறுமி.. வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்த விரோஷ் தம்பதியினர் – வீடியோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சிலம்பரசனின் STR51 படத்தின் டைட்டில் இதுவா? படத்தின் ஷூட்டிங் எப்போது தொடக்கம் தெரியுமா?

Follow Us
தூங்கி எழுந்ததும் நீல நிறமாக மாறிய நபர் - என்ன நடந்தது?
ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்.. எழுந்த புதிய சிக்கல்..
உலகின் அருவருப்பான பெண் என அழைத்த மக்கள் - குழந்தைகளுக்கு சிறந்த தாயாக மாறிய பெண்
"தெலுங்கு பேச தடுமாறினேன், பதற்றத்தில் தவறு நடந்துவிட்டது".. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்..