சூர்யாவின் கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்ற பிரபல ஓடிடி நிறுவனம்
Karuppu Movie OTT Rights: நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைப்பெற்று வரும் படம் கருப்பு. இந்தப் படம் தொடர்பான அப்டேட்களுக்குக்காக ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

கருப்பு
நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி நடிகர் சூர்யாவின் நடிப்பில் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான ரெட்ரோ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்தடுத்து இரண்டு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதன்படி இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இரண்டு படங்களின் பணிகளும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நடிகர் சூர்யாவின் கருப்பு படம் குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி முன்னதாகப் படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்ற பிரபல ஓடிடி நிறுவனம்:
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புகள் வெளியாகாமல் இருக்கிறது. ஆனால் படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் பெற்றுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன்படி நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… பென்ஸ் படத்தின் ஷூட்டிங்கை முடித்த நிவின் பாலி – வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
🚨 #Karuppu update!
– Digital rights reportedly snapped up by #Netflix for a record price in #Suriya’s career!💥📈
– Release date is said to be locked — official announcement dropping soon! 👀✨#Suriya46 #KaruppuUpdate 🎬🔥 pic.twitter.com/bGMudAE4Ai
— Movie Tamil (@_MovieTamil) November 22, 2025
Also Read… இந்த கியூட் பாப்பா யார் தெரியுதா? அஜித் – விஜய் பட நாயகிதான்!