இந்த வார இறுதியில் வெளியாகும் AK64 டைட்டில் மற்றும் அறிவிப்பு? வைரலாகும் தகவல்

AK 64 Movie Update: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் இந்த வார இறுதில் டைட்டில் மற்றும் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த வார இறுதியில் வெளியாகும் AK64 டைட்டில் மற்றும் அறிவிப்பு? வைரலாகும் தகவல்

அஜித் குமார்

Published: 

17 Feb 2026 11:07 AM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் வெளியான படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி நடிகர் அஜித் குமார் தனது ரேஸிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி கடந்த சில ஆண்டுகளாக நடிப்பு மற்றும் ரேஸிங் என இரண்டும் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித் குமார் படங்களில் ஹிட் கொடுப்பது மட்டும் இன்றி ரேஸிங்கில் தொடர்ந்து வெற்றிப் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி படம் அவரது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் குமாரின் தீவிர ரசிகர் என்பதால் அஜித் குமார் நடிப்பில் முன்னதாக நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களின் காட்சிகளை ரீ கிரியேட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 64-வது படத்திற்காகவும் நடிகர் அஜித் குமார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி வைப்பதாக அறிவிப்பு வெளியானது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அடுத்தக்கட்ட அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த வார இறுதியில் வெளியாகும் AK64 டைட்டில் மற்றும் அறிவிப்பு?

இந்த நிலையில் அஜித் குமாரின் 64-வது படத்தின் டைட்டில் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இந்த வார இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தப் படத்தினை எந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது இதுவரை உறுதியாகாத நிலையில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் நடிகர்கள் மோகன்லால் மற்றும் ஸ்ரீ லீலா இருவரும் படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… உங்கள் இதையத்தை கடத்த மீண்டும் வருகிறது சூது கவ்வும்… ரீ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ‘எந்தக்கட்சியிலும் நான் இல்லை.. பொதுவெளியில் விவாதம் வேண்டாம்’ – வழக்கறிஞர் மூலம் நடிகை த்ரிஷா அறிக்கை

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்