நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வைரலாகும் தகவல்

Karuppu Movie Release Update: நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தின் ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அப்டேட் தற்போதுவரை வெளியாகாத நிலையில் வெளியீட்டு தேதி என்ற ஒரு தேதி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வைரலாகும் தகவல்

கருப்பு

Published: 

16 Mar 2026 10:51 AM

 IST

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் கருப்பு. இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இவர் ரேடியோவில் ஆர்.ஜே-வாக தனது பணியைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் காமெடி நடிகராக நடிக்கத் தொடங்கிய ஆர்.ஜே.பாலாஜி பிறகு கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். காமெடி நடிகராக இவரைக் ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் அதனைத் தொடர்ந்து நாயகனாகவும் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து சினிமாவில் நாயகனாக நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜி அவர் நாயகனாக நடிக்கும் படங்களை இயக்கத் தொடங்கினார். இவரது இயக்கத்தில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவரது படங்களையே இயக்கி வந்த ஆர்.ஜே.பாலாஜி அதனைத் தொடர்ந்து மற்ற நடிகர்களின் படங்களை இயக்கத் தொடங்கினார்.

அந்த வகையில் நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி. இந்தப் படத்திற்கு கருப்பு என்று பெயர் வைக்கப்பட்ட நிலையில் படத்தின் பணிகள் ஒரு ஆண்டுக்கு மேலாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது என்று இயக்குநர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

தொடர்ந்து கருப்பு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தாலும் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த ஆண்டு படம் வெளியான நிலையில் அடுத்தது எப்போது வெளியாகும் என்று மிகுந்த ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கருப்பு படத்தின் வெளியீடு வரும் மே மாதம் 15-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… Tamannaah Bhatia: விஜய் டான்ஸ் ஆட ஆரம்பிச்சா.. ஐயோ! – தமன்னா சொன்ன விஷயம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ பட ரிலீஸ் தேதி எப்போது? – வெளியான அறிவிப்பு இதோ!

Follow Us
100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கிய கடனை திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
பிறந்த குழந்தையை கையில் வாங்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தந்தை - வைரலாகும் வீடியோ
காமிகாஸ் டிரோன் படகுகளை பயன்படுத்தி எண்ணெய் கப்பல்களை தாக்கும் ஈரான்
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததால் சரச்சை - சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கம்