தமிழில் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை சாய் பல்லவி – வைரலாகும் தகவல்
Sai Pallavi : தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது இந்தி சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை சாய் பல்லவி
மலையாள சினிமாவில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை சாய் பல்லவி (Actress Sai Pallavi). அதனைத் தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து முன்னணி நடிகையாக பலப் படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது இந்தி சினிமாவிலும் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. அதன்படி இந்தி சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் ராமாயணம் படத்தில் நடிகை சாய் பல்லவி சீதையாக நடித்து வருகிறா. இதில் நடிகர் ரன்பீர் கபூர் ராமர் கதாப்பாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. அதன்படி முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் இரண்டாவது பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று படக்குழு முன்பே அறிவித்துவிட்டது.
மேலும் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அவ்வபோது படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர்களின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி தமிழ் சினிமாவில் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்ற தகவல் தமிழ் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.
சிலம்பரசனுக்கு ஜோடியாகும் நடிகை சாய் பல்லவி:
அதன்படி நடிகர் சிலம்பரச்சன் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்புகள் வெளியானது. ஆனால் இதில் நாயகியாக யார் நடிக்க உள்ளார் என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகை சாய் பல்லவி தமிழ் சினிமாவில் இறுதியாக நடித்தப் படம் அமரன். நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்து அசத்தி இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… பிரமாண்ட இயக்குநர் சங்கருக்கு இப்போ இருக்கும் இயக்குநர்கள் யாரை பிடிக்கு? அவரே சொன்ன லிஸ்ட்
நடிகை சாய் பல்லவியின் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பதிவு:
Also Read… நான் காதல் படங்களில் நடித்தால் அது இப்படி மட்டும் தான் இருக்கும் – நடிகர் அர்ஜுன் தாஸ் சொன்ன விசயம்!