விறுவிறுப்பாக நடைபெறும் சூரியின் மண்டாட்டி படம்… புது அப்டேட் இதோ
Mandaati Movie Update: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக வலம் வருகிறார் நடிகர் சூரி. இவரது நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வரும் மண்டாட்டி படத்தில் நடித்து வருகிறார்.

மண்டாட்டி
தமிழ் சினிமாவில் பெயிடப்படாத சின்ன சின்ன வேடங்களில் நடித்து பின்பு காமெடி நடிகராக ஆனவர் நடிகர் சூரி. இவர் காமெடி நடிகராக நடித்தப் பலப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து வந்த நடிகர் சூரி கடந்த 2024-ம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 1 படத்தின் மூலமாக கதையின் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அந்தப் படத்தில் நடிகர் சூரியை நாயகனாக ரசிகர்கள் ஏற்றப் பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நாயகனாக பலப் படங்களில் சூரி நடித்துள்ளார். இறுதியாக தமிழ் சினிமாவில் நடிகர் சூரி நாயகனாக நடித்து வெளியான படம் மாமன். தாய் மாமாவின் பாசத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆன படம் மண்டாட்டி. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கி வரும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகின்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் வருகின்ற 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
விறுவிறுப்பாக நடைபெறும் சூரியின் மண்டாட்டி படம்:
சூரியின் ‘மண்டாடி’ திரைப்படத்தின் பட்ஜெட் 75 கோடி ரூபாய். பாய்மரப் படகுப் போட்டி காட்சிகளுக்காக வெளிநாட்டு சண்டைப் பயிற்சியாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கடல் காட்சிகள் நிஜக் கடலிலேயே படமாக்கப்பட்டு வருகின்றன. 90% காட்சிகள் நேரடியாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஒரு கேமரா தண்ணீரில் விழுந்ததால், படக்குழு ஒரு நாள் படப்பிடிப்புக் காட்சிகளை இழந்தது. அந்தக் காட்சிகளை அவர்கள் மீண்டும் படமாக்க வேண்டியிருந்தது. இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் டப் செய்யப்பட உள்ளது. சூரி இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார், மேலும் அவர் பாய்மரப் படகுப் பயிற்சியும் எடுத்துக்கொண்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read… GV.Prakash: திரையரங்குகளில் முதல் இடம்.. குட் பேட் அக்லி – பதிவை வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ்!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Soori’s #Mandaadi – Budget of the film is 75crs..😮💥 Foreign action specialists are roped in for the sail boat racing Scenes..🤝
• The sea scenes are being shot in the real sea.. 90% of the visuals have been shot live.. And the team lost a day’s footage when a camera fell into… pic.twitter.com/kGu0FfRutR
— Laxmi Kanth (@iammoviebuff007) December 30, 2025
Also Read… பேசில் ஜோசஃப் நடிக்கும் அதிரடி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ