SJ Suryah: குஷி படத்தின் கதை சொல்லும்போது விஜய் சாரின் ரியாக்ஷன் இதுதான் – எஸ்.ஜே. சூர்யா சொன்ன விஷயம்!

SJ Suryah About Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குநராக இருந்து வருபவர் எஸ்.ஜே. சூர்யா. இவரின் முன்னணி இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் ஜோதிகா நடித்திருந்த படம் குஷி. இப்படத்தின் கதை சொல்லும்போது விஜய்யின் ரியாக்ஷன் பற்றி எஸ்.ஜே. சூர்யா ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

SJ Suryah: குஷி படத்தின் கதை சொல்லும்போது விஜய் சாரின் ரியாக்ஷன் இதுதான் - எஸ்.ஜே. சூர்யா சொன்ன விஷயம்!

விஜய் மற்றும் எஸ்.ஜே. சூர்யா

Published: 

22 Sep 2025 08:30 AM

 IST

தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை 68 திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதை தொடர்ந்து, தற்போது அவரின் நடிப்பில் இறுதியாக உருவாகிவரும் படம் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில் விஜய் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் (SJ.Suryah) கூட்டணியில் கடந்த 2000ம் ஆண்டு வெளியான படம் குஷி (Kushi). இந்த படத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா (Jyothika) நடித்திருந்தார். அசத்தல் காதல் கதைக்களத்துடன் வெளியான இந்த படமானது, இன்று வரையிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படமானது வரும் 2025 செப்டம்பர் 25ம் தேதியில் ரீ- ரிலீஸ் செய்யப்படுகிறது . இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட எஸ்.ஜே. சூர்யா, இந்த படத்தின் கதையை முதன்முதலில் தளபதி விஜயிடம் சொல்லும்போது, அவர் ரியாக்ஷன் எப்படி இருந்தது என்பது பற்றி ஓபனாக பேசியுள்ளார். அது பற்றி விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : இதயப்பூர்வமான கதை வருவதற்கு இன்னும் பத்து நாட்கள் உள்ளன – இட்லி கடை படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்

குஷி பற்றி எஸ்.ஜே. சூர்யா பேச்சு:

குஷி படத்தின் ரீ- ரிலிஸ் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட எஸ்.ஜே.சூர்யா, அதில் “இந்த குஷி படத்தின் கதையை விஜய் சாரிடம் சொல்லும்போது, அமைதியாக கேட்டார். படத்தின் கதையை கேட்டுமுடித்தது பெரியதாக எதுவும் ரியாக்ட் பண்ணவே இல்லை. நானோ அவருக்கு படத்தின் கதை பிடிக்கவில்லையோ என்றும் நினைத்தேன். உடனே அவரிடம் சார் நான் வேறு ஏதாவது படத்தின் கதையை சொல்லவா என்று கேட்டேன்.

இதையும் படிங்க : அதிரடி கதைக்களத்தில்.. ஷேன் நிகம்- சந்தனு பாக்யராஜின் ‘பல்டி’ பட ட்ரெய்லர் இதோ!

உடனே விஜய் சார் என்னிடம், “ஏன் கதை நல்ல இருக்கே, இதையே பண்ணுவோம்” என என்னிடம் கூறினார். உடனே நானோ நல்ல இருக்கிறது என்றால் ஒரு ரியாக்ஷன் கொடுக்கவேண்டாமா என நானே மனதில் நினைத்துக்கொண்டு, சிரித்தேன். அப்படி விஜய் சாருடன் ஒரு அனுபவம் மிக்க திரைப்படம் குஷி” என நடிகர், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா அந்த நிகழ்ச்சியில் ஓபனாக பேசியிருந்தார். இது பற்றிய தகவல் குறித்து விவரமாக பார்க்கலாம்.

தளபதி விஜய்யிடம் குஷி படம் பற்றி கூறியது குறித்து எஸ்.ஜே. சூர்யா பேசிய வீடியோ :

மீண்டும் இயக்குநராக படம் இயக்கும் எஸ்.ஜே. சூர்யா :

நடிகர் எஸ்.ஜே. சூர்யா சுமார் 10 வருடங்களுக்கு பின் மீண்டும், கில்லர் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் இவரே ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார்.

அசத்தல் கதைக்களத்துடன் உருவாகிவரும் இப்படத்திற்கு, எஸ்.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.