கல்யாணை மாலை புது புது அர்த்தங்களை விட ப்ரோ கோட் படத்தில் தான் அதிக ஃபேமஸ் – எஸ்.ஜே.சூர்யா!

Actor SJ Suriyah: தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நடிகராக கலக்கி வருபவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் ப்ரோ கோட் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

கல்யாணை மாலை புது புது அர்த்தங்களை விட ப்ரோ கோட் படத்தில் தான் அதிக ஃபேமஸ் - எஸ்.ஜே.சூர்யா!

எஸ்.ஜே.சூர்யா

Published: 

19 Oct 2025 14:53 PM

 IST

தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வருபவர் நடிகர் எஸ்.ஜே.சூர்யா (SJ Suriyah). தொடர்ந்து இயக்குநராக பல ஹிட் படங்களை கொடுத்து வந்த எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்து தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் பலப் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக வில்லன் என்றாலே தென்னிந்திய சினிமாவைப் பொருத்தவரை எஸ்.ஜே.சூர்யா தான் என்று சொல்லும் அளவிற்கு தொடர்ந்து பலப் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகி வரும் படம் ப்ரோ கோட். நடிகர் ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ரவி மோகன் மற்றும் அர்ஜூன் அசோகனும் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியான போது ரசிகர்கள் அதனை கொண்டாடித் தீர்த்தனர். அதன்படி இந்தப் படத்தில் மூன்று திருமணம் ஆன ஆண்கள் அவர்களின் குடும்பத்தில் மனைவிகளிடம் எப்படி நலல்வர்கள் போல அதாவது மனைவிகளுக்கு ஏற்ற நபர்கள் போல இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் விதமாக இருந்தது. இந்த அறிமுக வீடியோவில் புதுபுது அர்த்தங்கள் படத்தில் வரும் கல்யாண மாலை பாடல் ஒலிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

கல்யாணை மாலை ப்ரோ கோட் படத்தில் தான் அதிக ஃபேமஸ்:

புது புது அர்த்தங்களை விட கல்யாண மாலை பாடல் ப்ரோ கோட் படத்தில் வைரலாகி வருகிறது. இந்த ப்ரோமோவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது, படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். இயக்குனர் கார்த்திக் யோகி வித்தியாசமான ஒன்றைத் திட்டமிடுகிறார் என்றும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்து இருந்தார்.

Also Read… தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது கருப்பு படத்தின் முதல் சிங்கிள் – அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ

இணையத்தில் கவனம் பெறும் எஸ்.ஜே.சூர்யா பேச்சு:

Also Read… Mari Selvaraj: அந்த மலையாள படத்தைப் பார்த்து பொறாமைப்பட்டேன்.. மாரி செல்வராஜ் சொன்ன படம் என்ன தெரியுமா?