தாய் கிழவி பட இயக்குநருடன் சிவகார்த்திகேயன் இணையும் படம்.. ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது தெரியுமா?

Sivakarthikeyan New Movie Shooting Update : கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவர் மற்றும் இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் ,தமிழில் புது படமானது உருவாகவுள்ளது. இந்நிலையில் இது குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

தாய் கிழவி பட இயக்குநருடன் சிவகார்த்திகேயன் இணையும் படம்.. ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது தெரியுமா?

சிவகார்த்திகேயன் மற்றும் சிவகுமார் முருகேசன்

Updated On: 

12 Feb 2026 12:17 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2012ம் ஆண்டில் வெளியான மெரினா (Marina) என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக நுழைந்தவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraj) இயக்க, சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) மற்றும் ஓவியா (Oviya) இணைந்து நடித்திருந்தனர். இப்படம் அவருக்கு ஓரளவு வரவேற்பை கொடுத்தது. அதையடுத்து தமிழில் துணை வேடங்கள் மற்றும் நகைச்சுவை வேடங்களில் இவர் நடித்துவந்தார். தற்போது இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 24 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakhi). இப்படமானது சிவகார்த்திகேயனுக்கு பல நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்திருந்தது. அந்த விதத்தில் இப்படம் திரையரங்குகளில் வரவேற்கப்படவில்லை.

இந்நிலையில் இப்படத்தை முடித்த கையேடு, தற்போது தாய் கிழவி (Thaai Kizhavi) பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugeshan) இயக்கத்தில் புது படத்தில் இணையவுள்ளாராம். இந்த படமானது அதிரடி கிராமத்து பின்னணி கதைக்களத்தில் தயாராகவுள்ளதாம். இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : இதயங்களை வென்ற படம்… 10 ஆண்டுகளை நிறைவு செய்த விசாரணை படத்தைப் புகழ்ந்து பதிவிட்ட தனுஷ்!

சிவகார்த்திகேயன் – சிவகுமார் முருகேசன் கூட்டணி பட ஷூட்டிங்:

தாய் கிழவி என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளவர் சிவகுமார் முருகேசன். இப்படத்தில் ராதிகா சரத்குமார் லீட் வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், வரும் 2026 பிப்ரவரி 20ம் தேஹியை இப்படம் வெளியாக காத்திருக்கிறது. இப்படத்தை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ள நிலையில், வித்தியாசமான ஆக்ஷன் ரூரல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படமானது அருமையாக வந்துள்ள நிலையில், சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் சிவகுமார் முருகேசன் கதை கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நீங்க எல்லாவற்றையும் புரிந்துகொள்ள இது போதுமானது… பூக்கி பட ட்ரெய்லரை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

இது சிவகார்த்திகேயனுக்கு பிடிக்கவே, சமீபத்தில் இதன் புரோமோ ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இப்படமானது மதுரை சுற்றுவட்டார கிராம பின்னணி கதைக்களத்தில் தயாராகவுள்ள நிலையில், இதன் ஷூட்டிங் வரும் 2026 மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாம். இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் பரவிவருகிறது.

சிவகார்த்திகேயனின் புது படம் குறித்து வைரலாகும் பதிவு :

சிவகார்த்திகேயன் பராசக்தி படத்திற்கு பின் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் புது படத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், உடனடியாக சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் படத்தில் இணைவதாக கூறப்படுகிறது. இதன் அறிவிப்பு வரும் 2026 பிப்ரவரி 17ம் தேதியில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சக்திவாய்ந்த கப்பல்களை அசால்டாக எதிர்கொள்ளும் ஈரான் - காரணம் என்ன?
ஜன நாயகன் பட சென்சார் விவகாரம் – வழக்கை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி!
சர்வதேச பனிச் சிற்பப் போட்டியில் இந்திய அணிக்கு பதக்கம்
ஐரோப்பாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்: என்னென்ன தெரியுமா?