Parasakthi: தொடர் வெற்றி… ரூ.100 கோடி வசூலை கடந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி!

Parasakthi Movie Box Office Collection: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரின் 25வது திரைப்படமாக வெளியானது பராசக்தி. இப்படமானது வெளியாகி 10 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளாவிய கலெக்ஷனில் சுமார் ரூ 100 கோடிகளை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Parasakthi: தொடர் வெற்றி... ரூ.100 கோடி வசூலை கடந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி!

பராசக்தி

Updated On: 

20 Jan 2026 19:54 PM

 IST

தமிழ் சினிமாவில் இந்த 2026ம் ஆண்டில் முதலில் வெளியாகிய பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இப்படத்தில் சிவகார்த்திகேயன் (Sivakathikeyan) கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) வில்லனாக நடித்திருந்தார். இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று போன்ற பிரமாண்ட படங்களை இயக்கியிருந்த இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இதனை இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இப்படம் இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான கதைக்களத்தில் வெளியாகியிருந்த நிலையில், இந்தி மொழியை தவிர்த்து மற்ற மொழிகளில் வெளியிடப்பட்டிருந்தது. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில், இது அவரின் 100வது படமாகும். இதில் ஸ்ரீலீலா (Sreeleela), அதர்வா (Athrvaa), ராணா, பேசில் ஜோசப் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படமானது அரசியல், காதல் மற்றும் மொழி போன்ற கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இதனிடையே, வெளியாகி 11 நாட்களான நிலையில், உலகளாவிய வசூலில் இதுவரை மொத்தமாக சுமார் ரூ.100 கோடிகளை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்திய திரைப்பட விழா சிங்கப்பூர் 2026-ல் தேர்வானது சூரரைப் போற்று படம்!

பராசக்தி படக்குழு வெளியிட்ட வசூல் விவரம் குறித்த எக்ஸ் பதிவு :

சிவகார்த்திகேயனின் ரூ 100 கோடி வசூல் பெற்று வெற்றிபெற்ற படங்கள் :

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பிரபலமான ஒருவராக இருக்கிறார். இவரின் நடிப்பில் தமிழ் மொழியில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்களானது வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இவரின் படங்களும் தொடர்ந்த ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் வெளியான எந்தெந்த படங்கள் ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது தெரியுமா?.

இதையும் படிங்க: தளபதி விஜய்யின் ஜன நாயகன் சென்சார் விவகாரம்… விசாரணை முடிந்தும் தீர்ப்பை ஒத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம்!

முதல் முதலில் இவருக்கு ரூ.100 கோடி வசூலை கொடுத்த படம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான டாக்டர் திரைப்படம், அதனைத் தொடர்ந்து இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம், அதையடுத்து ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் வெளியான அமரன், மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான மதராஸி மற்றும் தற்போது சுதா கொங்கராவின் இயக்கத்தில் வெளியான பராசக்தி என தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 5 படங்கள் ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதில் அமரன் படம் மட்டும் ரூ.300 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் அதிரடியாக உயர்ந்த சமையல் எண்ணெய்.. கடும் அவதியில் மக்கள்..
புஷ்பானா ஃபயர்! புஷ்பா 2 புரமோஷனுக்காக ஜப்பானில் அல்லு அர்ஜுன்
உரிமையாளரை காப்பாற்ற புலியுடன் போராடி உயிர் தியாகம் செய்த நாய்.. நெகிழ்ச்சி சம்பவம்..
3 நாகப் பாம்புகள் உடன் மருத்துவமனைக்கு வந்த நபர்.. பீகாரில் நடந்த பரபரப்பு சம்பவம்..