Sivakarthikeyan : அனிருத்தின் திருமணம் எப்போது? சிவகார்த்திகேயன் சொன்ன ஆச்சர்ய பதில் இதோ!

Sivakarthikeyan About Anirudh Marriage : தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத் ரவிச்சந்தர். இவர் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில், இவரின் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சுவாரஸ்யமான பதிலை கூறியிருக்கிறார். அது என்ன என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.

Sivakarthikeyan : அனிருத்தின் திருமணம் எப்போது? சிவகார்த்திகேயன் சொன்ன ஆச்சர்ய பதில் இதோ!

அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன்

Published: 

28 Aug 2025 17:12 PM

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) முன்னணி நடிப்பில் வெளியாக காத்திருக்கும் படம் மதராஸி (Madharaasi). இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, அனிருத் (Anirudh) இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் டான் படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பின் மீண்டும், அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் இந்த மதராஸி படத்தில் இணைத்துள்ளது. இந்நிலையில், இந்த மதராஸி படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

இது தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டுவருகிறது. மேலும் அனிருத்தின் திருமணம் குறித்த வதந்திகள் அவ்வப்போது இணையதளங்களில் வைரலாகிவருகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வருகிறார்.

இதையும் படிங்க : மம்முட்டி மற்றும் விநாயகன் நடிப்பில் வெளியானது கலம்காவல் டீசர்!

இந்நிலையில், அனிருத்தின் திருமணம் எப்போது என ரசிகர்கள், அவரை பார்க்கும் இடமெல்லாம் கேட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், அனிருத் ரவிச்சந்திரன் திருமணம் குறித்து பேசியுள்ளார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அனிருத்தின் திருமணம் குறித்து சிவகார்த்திகேயன் சொன்ன பதில் :

சமீபத்தில் நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயனிடம், “உங்கள் நண்பன் அனிருத்துக்கு எப்போது திருமணம் ஆகும்?” என கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சிவகார்த்திகேயன், ” பொதுவாக பலருக்கும் இரவு 8 மணிக்கு மேல், வீட்டிலிருந்து எங்கு இருக்கிறீங்க?, எப்போது வருவீர்கள்? என அழைப்புகள் வரும். ஆனால் அனிருத் தூங்கி எழுவதே இரவு 8 மணிக்குத்தான்.

இதையும் படிங்க : சூப்பர் வுமனாக கல்யாணி பிரியதர்ஷன்.. லோகா திரைப்படம் எப்படி இருக்கு?

மேலும் அவருக்கு திருமணமா? அல்லது ஹிட் பாடல்களா? என வரும்போது, அவர் ஹிட் பாடல்தான் முக்கியம் என சொல்வார். மற்றபடி திருமணம் குறித்த முடிவு முழுவதும் அவரின் கையில்தான் இருக்கிறது” என நடிகர் சிவகார்த்திகேயன் அனிருத்தின் திருமணம் குறித்து சுவாரஸ்யமாக பேசியிருந்தார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் வெளியிட்ட மதராஸி பாடல்கள் குறித்த பதிவு

அனிருத் இசையமைக்கும் படங்கள்

இசையமைப்பாளர் அனிருத்தின் இசையமைப்பில் பல படங்கள் உருவாகி வருகிறது. இவரின் இசையமைப்பில் சமீபத்தில் கிங்டம் என்ற படமும் வெளியாகியிருந்தது. இதைத் தொடர்ந்து மதராஸி படம் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. மேலும் அனிருத் தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்திற்கு இசையமைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.  இப்படமானது விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட் மற்றும் பாடல்கள் மீதும் அதிக எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.