ரவி மோகன் சார் படம் தயாரிப்பதில் நான் உங்க சீனியர்… கலகலப்பாக பேசிய சிவகார்த்திகேயன்

Actor Ravi Mohan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ரவி மோகன் தற்போது பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகராக மட்டும் இன்றி சினிமாவில் தற்போது அடுத்த அவதாரத்தை எடுத்துள்ளார். அதன்படி தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

ரவி மோகன் சார் படம் தயாரிப்பதில் நான் உங்க சீனியர்... கலகலப்பாக பேசிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் - ரவி மோகன்

Published: 

26 Aug 2025 15:07 PM

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் ரவி மோகன். இவரும் ஒரு வாரிசு நடிகர் தான். இவரது தந்தை மோகன் தமிழ் சினிமாவில் பிரபல எடிட்டராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது அண்ணன் மோகன் ராஜாவும் ஒரு இயக்குநர் ஆவார். வாரிசு நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனாலு தனது கடின உழைப்பால் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கான இடத்தைப் பிடித்துக்கொண்டார். ஜெயம் படத்திற்கு பிறகு அனைவரும் இவரை ஜெயம் ரவி என்றே அழைத்து வந்தனர். அது மட்டும் இன்றி சினிமா துறையிலும் இவர் ஜெயம் ரவி என்றே அழைக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி தன்னை இனி ரவி மோகன் என்று அழையுங்கள் என ரசிகர்களிடையே கோரிக்கை வைத்த பிறகு தன்னை ரவி மோகன் என்றே அடையளப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக காதலிக்க நேரமில்லை படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் வரிசையாக உருவாகி வருகின்றது. இதில் ஒரு படத்தில் வில்லனாகவும் நடிகர் ரவி மோகன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விசயத்துல உங்களுக்கு சீனியர் சார் நான்:

தொடர்ந்து சினிமாவில் நாயகனாக நடித்து வரும் ரவி மோகன் தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இதில் பிரபலங்கள் உட்பட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டு பேசினர்.

இந்த நிலையில் இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது படங்களில் நடிப்பதைவிட படங்களை தயாரிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சந்தோசத்தை கொடுக்கும், மேலும், நடிப்பில் நீங்க எனக்கு சீனியர் சார். ஆனால் நான் தான் படங்களை தயாரிப்பதில் உங்களுக்கு சீனியர் என்று சிவகார்த்திகேயன் கலகலப்பாக பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… யு/ஏ சான்றிதழ் கோரி கூலி படக்குழு தொடர்ந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

இணையத்தில் கவனம் பெறும் சிவகார்த்திகேயனின் பேச்சு:

Also Read… 19 ஆண்டுகளை நிறைவு செய்தது கமல் ஹாசனின் வேட்டையாடு விளையாடு படம்