தூங்கி எழுந்ததும் ரஜினிகாந்தா மாறியிருந்தா இதுதான் பண்ணுவேன் – சிவகார்த்திகேயன் சொன்ன சுவாரஸ்ய விசயம்

Actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மதராஸி படத்தின் புரமோஷன் பணிகளில் மிகவும் பிசியாக இருக்கிறார். படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் புரமோஷன் நிகழ்ச்சி மற்றும் பேட்டிகளில் சிவகார்த்திகேயன் பேசியது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

தூங்கி எழுந்ததும் ரஜினிகாந்தா மாறியிருந்தா இதுதான் பண்ணுவேன் - சிவகார்த்திகேயன் சொன்ன சுவாரஸ்ய விசயம்

சிவகார்த்திகேயன் மற்றும் ரஜினிகாந்த்

Published: 

03 Sep 2025 18:00 PM

 IST

நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) தமிழ் சினிமாவில் தற்போது பிசியான நடிகராக வலம் வருகிறார். தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சிவகார்த்திகேயனின் படம் மதராஸி தற்போது வெளியீட்டிற்காக காத்திருக்கின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் வருகின்ற 5-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு நடிகர்கள் உட்பட படக்குழுவினர் சென்று தங்களது படத்தை புரமோட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கானாவிற்கு சென்ற மதராஸி படக்குழுவில் இருந்து நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை ருக்மினி வசந்தை வைத்து ஒரு பேட்டி ஒன்றை எடுத்துள்ளனர். அதில் நடிகர்கள் இருவரும் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. மேலும் பல கேள்விகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பதில்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நான் ரஜினிகாந்தா மாறினா இதுதான் செய்வேன்:

இந்த நிலையில் அந்த பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயனிடம் நீங்க தூங்கி எழுந்துக்கும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தா மாறி எழுந்தீங்கனா என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் சிவகார்த்திகேயன் நான் ரஜினிகாந்த் சாரா இருந்தா உடனே 5 படங்களில் கமிட்டாகி உடனே அட்வான்ஸ் வாங்கிவிடுவேன் அந்த 5 படங்களுக்கும்.

ஏன்னா ரஜினிகாந்த் சாரோட சம்பளம் அதிகம். அப்போ 5 படத்தில கமிட்டாகி அட்வான்ஸ் வாங்குனா அது பெரிய தொகையாக இருக்கும் என்றே சிரித்துக்கொண்டு அவர் கூறிய பதில் இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

Also Read… மிராய் படத்தின் ட்ரைலரைப் பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்  – வைரலாகும் ட்விட்டர் பதிவு!

இணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் வைரல் வீடியோ:

Also Read… Pookie: மருமகனை ஹீரோவாக்கிய விஜய் ஆண்டனி… வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!