Sivakarthikeyan: ஆர்த்தி இல்லாமல் என்னால் எதுவுமே பண்ணிருக்க முடியாது – மனைவியை புகழ்ந்து பேசிய சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan About His Wife Aarthi: நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் கடந்த 2026 பிப்ரவரி இறுதியில் வெளியாகி மிகவும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்த திரைப்படம்தான் தாய் கிழவி. இப்படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடைபெற்றிருந்த நிலையில், அதில் தனது மனைவி ஆர்த்தி குறித்து சிவகார்த்திகேயன் எமோஷனலாக பேசியுள்ளார்.

Sivakarthikeyan: ஆர்த்தி இல்லாமல் என்னால் எதுவுமே பண்ணிருக்க முடியாது - மனைவியை புகழ்ந்து பேசிய சிவகார்த்திகேயன்!

ஆர்த்தி மற்றும் சிவகார்த்திகேயன்

Updated On: 

12 Mar 2026 15:09 PM

 IST

தமிழ் சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் வித்தியாசமான திரைப்படங்களை திரைக்கு கொண்டுவருவார் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரின் தயாரிப்பில் கடந்த 2026 பிப்ரவரி 27ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியான திரைப்படம் தாய் கிழவி (Thaai Kizhavi). இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கியிருந்தார். இதில் ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar) முக்கியமான வேடத்தில் நடித்திருந்த நிலையில், ஒரு பெண் சமூகத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இப்படமானது வசூல் மற்றும் விமர்சனங்கள் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றுவந்த நிலையில், இதுவரை ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக சமீபத்தில் தாய் கிழவி பட வெற்றிகொண்டாட்டம் மிகவும் சிறப்பாகவே நடைபெற்றிருந்தது.

அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், தனது மனைவி ஆர்த்தி (Arthi Sivakarthikeyan) குறித்து மனம் திறந்துள்ளார். தனது தயாரிப்பு நிறுவனம் சரியாக நடப்பதற்கே அவர்தான் காரணமா என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியானது அனுபமா பரமேஸ்வரனின் லாக் டவுன் படம் – உற்சாகத்தில் ரசிகர்கள்

தனது மனைவி ஆர்த்தி குறித்து சிவகார்த்திகேயன் பேசிய விஷயம்:

அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், “எனக்கு திருமணமானத்தில் இருந்து, வீட்டின் வரவு செலவு எல்லாத்தையுமே பார்ப்பது ஆர்த்திதான். எனக்கு எனது அக்கவுண்டில் எவ்வளவு காசு இருக்கிறது என்பது கூட தெரியாது. எதாவது ஊருக்கு செல்லவேண்டும் என்றாலே ஆர்த்தியிடம்தான் காசு கேட்பேன். இப்போதும் அதை நான் பெருமையாக சொல்லுவேன். எல்லாவற்றையுமே அவர்தான் பார்துக்கொள்கிறார். ஆர்த்தி இதையெல்லாம் பார்க்கவில்லை என்றால் என்னால் படங்களை தயாரித்திருக்க முடியாது. ஆர்த்தியும் எனக்கு ஒரு பவுனுதாயி மாதிரிதான் தெரிஞ்சாங்க.

இதையும் படிங்க: தாய் கிழவி படத்தின் வெற்றியால் தள்ளிப்போன சேயோன் பட ஷூட்டிங் – சிவகார்த்தியேன் ஓபன் டாக்

அதுபோல அனைவரின் வீட்டிலும், பெண்ணாக பல சேமிப்புகளை சேர்த்தும், தனது குழந்தைகளை பார்த்தும். ஒரு அம்மாவாக, அக்காவாக, தங்கையாக இருக்கும் அனைவருக்குமே இந்த தாய் கிழவி திரைப்படம் சமர்ப்பணம்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

தனது மனைவி ஆர்த்தி குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ பதிவு:

நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது தாய் கிழவி பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்திலே சேயோன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்புகள் எல்லாமே ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. இப்படத்தின் ஷூட்டிங் 2026 ஏப்ரல் மாதத்தில் தொடங்குவதாக கூறப்பட்ட நிலையில், சில காரணங்களால் ஷூட்டிங் தள்ளிபோவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..