Sivakarthikeyan: ஆரோமலே படத்தை பார்த்து படக்குழுவை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan praise Aaromaley Movie Crew: தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து படங்கள் உருவாகிவரும் நிலையில், சமீபத்தில் ஆரோமலே திரைப்படத்தை பார்த்துள்ளார். இப்படத்தை பார்த்து, படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவை அப்படத்தின் நடிகர் கிஷன் தாஸ் வெளியிட்டிருக்கிறார்.

Sivakarthikeyan: ஆரோமலே படத்தை பார்த்து படக்குழுவை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் மற்றும் ஆரோமலே படக்குழு

Published: 

05 Nov 2025 19:05 PM

 IST

தமிழில் வளர்ந்துவரும் நடிகரின் ஒருவராக இருந்துவருபவர் கிஷன் தாஸ் (Kishen Das). இவர் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான “முதல் நீ முடிவும் நீ” (Mudhal Nee Mudivum Nee) என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இந்த படத்தில் பள்ளிப்பருவ காதல் மற்றும் காதலுக்கு இடையே வரும் பிரச்சனைகள் தொடர்பான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அவருடன் நடிகை மீத்தா ரகுநாத் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் இவர் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவந்தார். அந்த வகையில் நடிகர் கிஷன் கதாநாயகனாக நடித்திருக்கும் அடுத்தப் படம்தான் ஆரோமலே (Aaromaley). இப்படத்தை அறிமுக இயக்குநர் சாரங் தியாகு (Sarang Thiagu) இயக்கியுள்ளார். இந்த படமானது வரும் 2025 நவம்பர் 7ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக் காட்சிகள் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில், அந்த படத்தைப் பார்த்த சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) இப்படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவை நடிகர் கிஷன் தாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: தனுஷ் ரசிகர்களுக்கு D 54 படக்குழு வைத்த கோரிக்கை – என்ன தெரியுமா?

சிவகார்த்திகேயன் வாழ்த்தியது குறித்து கிஷன் தாஸ் வெளியிட்ட எஸ்கே பதிவு :

இந்த திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளை பார்த்த சிவகார்த்திகேயன் படத்தை வாழ்த்தியுள்ளார். மேலும் இந்த பதிவில் நடிகர் கிஷன், “விஜய் டிவியில் இருந்து இன்றுவரை, நான் சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகன். சிவகார்த்திகேயன் தனது ஸ்பெஷலான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி ஆரோமலே திரைப்படத்தை பார்த்தார்.

இதையும் படிங்க: துல்கர் சல்மானின் காந்தா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

இந்த படத்தை அவர் ரசித்து பார்த்தது மட்டுமில்லாமல், அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் படக்குழுவினரை வாழ்த்தியது மற்றும் மிக்க நன்றி சிவகார்த்திகேயன் அண்ணா” என அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

ஆரோமலே திரைப்படம் :

இந்த படத்தில் நடிகர் கிஷன் தாஸ், குட்டி டிராகன் என அழைக்கப்படும் நடிகர் ஹர்ஷத் கான் இருவரும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இதில் கதாநாயகியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் பேக்ரவுண்ட் வாய்ஸ் ஓவர் நடிகர் சிலம்பரசன் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதில் நடிகை மேகா ஆகாஷ் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கிஷன் தாஸ் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் இப்படத்தின் கதையையும் இயக்குநருடன் இணைந்தும் எழுதியுள்ளார். இந்த படமானது வித்தியாசமான காதல் கதைக்களத்தில் வரும் 2025 நவம்பர் 7ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.