Amaran : அமரன் படத்திற்கு குவியும் அவார்ட்ஸ்.. சைமா விருதுகளை வென்ற சாய் பல்லவி – சிவகார்த்திகேயன்!

Amaran Movie Wins 4 SIIMA Awards : தமிழ் சினிமாவில் கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது அமரன். இந்த படத்தில் சாய் பல்லவி மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்திருந்தனர். 2024ம் ஆண்டிற்கான சைமா விருதுகளில் இப்படமானது கிட்டத்தட்ட 4 விருதுகளை பெற்றுள்ளது. இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Amaran : அமரன் படத்திற்கு குவியும் அவார்ட்ஸ்.. சைமா விருதுகளை வென்ற சாய் பல்லவி - சிவகார்த்திகேயன்!

அமரன் படக்குழு

Published: 

07 Sep 2025 19:57 PM

 IST

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) மற்றும் சாய் பல்லவியின் (Sai Pallavi) கூட்டணியில் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியான திரைப்படம் அமரன் (Amaran). இந்த படத்தை பிரபல இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periyasamy) இயக்கியிருந்தார். மேலும் கமல்ஹாசன் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனமானது இணைந்து தயாரித்திருந்தது. இந்த படமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிடுந்தது. இது மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து வெளியாகியிருந்தது.

இந்த படத்திற்கு இசையமைப்பார் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் வெளியான அனைத்தும் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த அமரன் படமானது, 2025ம் ஆண்டு சைமா விருது (Siima awards 2025) வழங்கும் நிகழ்ச்சியில், கிட்டதட்ட 4 விருதுகளை வாங்கியுள்ளது. அது என்ன என்பது பற்றி விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : விஜய் குறித்த கேள்வி.. மேடையில் வெட்கப்பட்ட திரிஷா கிருஷ்ணன் – வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் சாய் பல்லவியின் வீடியோ :

4 சைமா விருதுகளை வாங்கிய அமரன் படம் :

இந்த அமரன் படத்திற்கு இசையமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி. பிரகாஷிற்கும், அமரன் படத்திற்காக சிறந்த நடிகை விருது சாய் பல்லவிக்கும், சிறந்த நடிகருக்கான விருது சிவகார்த்திகேயனுக்கு மற்றும் சிறந்த படத்திற்காக விருது அமரன் படத்திற்கும் கிடைத்துள்ளது. 2024ம் ஆண்டிற்காக சினிமா விருது, இந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் தொடக்கத்தில் துபாயில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 4 விருதுகளை வென்று அமரன் படமானது சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க : சந்திரா படத்தின் மூத்தோன் இவர்தான்… படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

சைமா வெளியிட்ட சாய் பல்லவி கியூட் புகைப்படங்கள் பதிவு :

நடிகை சாய் பல்லவி, தமிழ், மலையாளம் , தெலுங்கு போன்ற மொழி படங்களை தொடர்ந்து , தற்போது இந்தி சினிமாவிலும் நுழைந்துள்ளார். இயக்குனர் நிதீஷ் திவாரியின் இயக்கத்தில் உருவாகிவரும் ராமாயணம் பார்ட் 1ன் படத்தில் சீதையாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

ராமாயணம் பார்ட் 1 படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு தீபாவளிக்கு இந்த படமானது வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து ராமாயணம் பார்ட் 2 வரும் 2027ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.