இன்னும் 15 வருஷம் ஆச்சுனா 100 சின்மயி, ஷ்ரேயா கோஷல்களை விழுங்கும் அளவிற்கு பெரிய ஆளாக வருவார் தீ – வைரலாகும் சின்மயி பேச்சு

Chinmayi about Dhee: தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாடகி சின்மயி பாடிய முத்த மழை பாடல் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சமீபத்தில் சின்மயி அளித்தப் பேட்டி வைரலாகி வருகின்றது.

இன்னும் 15 வருஷம் ஆச்சுனா 100 சின்மயி, ஷ்ரேயா கோஷல்களை விழுங்கும் அளவிற்கு பெரிய ஆளாக வருவார் தீ - வைரலாகும் சின்மயி பேச்சு

சின்மயி

Published: 

01 Jun 2025 12:27 PM

 IST

இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam) இயக்கத்தில் தற்போது ரிலீஸிற்காக காத்திருக்கும் படம் தக் லைஃப். இந்தப் படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் இருவரும் நாயகன்களாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகை தீ முத்த மழை என்ற பாடலைப் பாடியுள்ளார். ஆனார் இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொள்ள முடியாத காரணத்தால் அங்கு பாடகி சின்மயி அந்தப் பாடலைப் பாடினார். அது இணையத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இதில் பாடகி சின்மயி பாடியது சிறப்பாக இருந்ததா இல்லை பாடகி தீ பாடியது சிறப்பாக இருந்ததா என்று விவாதம் ரசிகர்களிடையே எழத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப்:

இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மற்றும் இரண்டிற்கு பிறகு தற்போது தக் லைஃப் படத்தை இயக்கியுள்ளார். கமல் ஹாசன், சிலம்பரசன் நாயகன்களாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் அபிராமி ஆகியோர் நாயகிகளாக நடித்து உள்ளனர்.

மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், வடிவுக்கரசி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

முத்த மழை பாடல் குறித்த விவாதம்:

தக் லைஃப் படம் பான் இந்திய அளவில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் பாடல்கள் குறித்த விவாதம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதன்படி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கடந்த 24-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு சென்னையில் கோலாகலமாக நடைப்பெற்றது. இதில் பாடகர்கள் அனைவரும் தங்களது பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

இந்த நிலையில் தக் லைஃப் படத்தின் தமிழ் மொழியில் முத்த மழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். அவர் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாத சூழல் காரணமாக இந்தப் பாடலை பாடகி சின்மயி பாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து தீ பாடிய பாடல் சிறந்ததா அல்லது சின்மயி பாடிய பாடல் சிறந்ததா என்ற விவாதம் இணையத்தில் தொடங்கியது.

பாடகி தீ குறித்து பாடகி சின்மயி பேச்சு:

இதுகுறித்து பேசிய சின்மயி நான் இந்தப் பாடலை தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பாடியுள்ளேன். மேலும் பாடிகி தீ இந்தப் பாடலுக்கு தனது வெர்ஷனில் மிக அழகாக சிறப்பு சேர்த்துள்ளார். பாடகர்களை ஒப்பிட்டு பேசுவது சரியானதாக தோன்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வைரலாகும் சின்மயி பேட்டி:

மேலும் தீ முன்னதாக பல பாடல்களை பாடியிருந்தாலும் அவர் மிகவும் சிறிய வயது உடையவர். அவர் இன்னும் 15 ஆண்டுகளுக்கு பிறகு பார்த்தால் 100 சின்மயி மற்றும் 100 ஷ்ரேயா கோஷல்களை விழுங்கும் அளவிற்கு பெரிய பாடகியாக இருப்பார். அவரின் குரலில் ஒரு தனித் தன்மை உள்ளது என்றும் சின்மயில் வெகுவாகப் பாராட்டி இருந்தார்.

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..