இந்திய சினிமாவின் எவர்கிரீன் ஐகான் விருதை வென்ற சிம்ரன் – வைரலாகும் நெகிழ்ச்சிப் பதிவு!

Actrss Simran X Post About Evergreen Icon of Indian Cinema Award: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சிம்ரன். இவருக்கு சமீபத்தில் இந்திய சினிமாவின் எவர்கிரீன் ஐகான் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. அது குறித்து சிம்ரனின் பதிவு வைரலாகி வருகின்றது.

இந்திய சினிமாவின் எவர்கிரீன் ஐகான் விருதை வென்ற சிம்ரன் - வைரலாகும் நெகிழ்ச்சிப் பதிவு!

சிம்ரன்

Published: 

07 Mar 2026 17:52 PM

 IST

நடிகை சிம்ரன் கடந்த 1995-ம் ஆண்டு இந்தி சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். இவர் இந்தி சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பலப் படங்களில் நடித்து உள்ளார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்தார். தொடர்ந்து பல முன்னணி நாயகன்களுக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்துள்ளார். 90ஸ் கிட்ஸ்களின் கனவுக் கண்ணியாக நடிகை சிம்ரன் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஜய், அஜித் மற்றும் பிரசாந்த் உடன் இணைந்து நடிகை சிம்ரன் நடித்தப் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை சிம்ரன் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். இந்த நிலையில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2025-ம் ஆண்டில் நடிகை சிம்ரனின் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகை சிம்ரனின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவின் எவர்கிரீன் ஐகான் விருதை வென்ற சிம்ரன்:

இந்த நிலையில் சமீபத்தில் ஜேப்பியார் ஐகான் விருதுகள் 2026 விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகை சிம்ரனுக்கு இந்திய சினிமாவின் எவர்கிரீன் ஐகான் என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இந்த விருதைப் பெற்றது குறித்து நடிகை சிம்ரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஜேப்பியார் ஐகான் விருதுகள் 2026 இல் “இந்திய சினிமாவின் எவர்கிரீன் ஐகான்” விருதைப் பெற்றதற்கு உண்மையிலேயே நன்றி. சினிமா எனக்கு வாழ்நாள் முழுவதும் நினைவுகள், காதல் மற்றும் மறக்க முடியாத தருணங்களைக் கொடுத்துள்ளது. இந்த அழகான பயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… இயக்குநர் சங்கரின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது – நடிகர் சரத்குமார் ஓபன் டாக்!

நடிகை சிம்ரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Thalaivar 173: ஆரம்பிகலமா? ரஜினிகாந்தின் ‘தலைவர் 173’ பட ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் தொடக்கம்!

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..