சிலம்பரசனின் அரசன் படம் குறித்து வைரலாகும் அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
Arasan Movie Update: நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப் படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

அரசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன் (Actor Silambarasan). இவர் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் உடன் கூட்டணி வைத்துள்ள படம் அரசன். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் கசிந்து ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. ஆனால் இந்த செய்தி சூர்யா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. அதற்கு காரணம் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் இறுதியாக விடுதலை பாகம் 2 படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படத்தில் கவனம் செலுத்தி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும் வெற்றிமாறன் உடன் சூர்யா இருக்கும் புகைப்படத்தை தயாரிப்பாளர் வெளியிட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர்.
ஆனால் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே சிலம்பரசன் உடன் வெற்றிமாறன் கூட்டணி வைத்து உள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து இந்தப் படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து இந்தப் படத்திற்கு அரசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த செய்தி சூர்யா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் சிலம்பரசன் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சிலம்பரசனின் அரசன் படம் குறித்து வைரலாகும் அப்டேட்:
நடிகர் சிலம்பரசனின் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 24 ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நடைபெறும் இந்த முதற்கட்ட படப்பிடிப்பில் சிம்பு, சமுத்திரக்கனி மற்றும் கிஷோர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு தீவிரமான ஆக்ஷன் காட்சிகளுடன் படக்குழு தொடங்க உள்ளது.
நாயகி தேர்வு செய்வதற்கன பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்ற நிலையில், படத்தில் இரண்டு பெண் கதாநாயகிகள் இடம்பெறுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. படப்பிடிப்பின் இரண்டாவது கட்டத்தின் போது இந்த கதாநாயகிகள் இணைவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… LIK படம் கடந்து வந்த பாதை என பதிவை வெளியிட்டு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் – வைரலாகும் பதிவு!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
✨ #ARASAN Movie Update ✨
— The shooting of #SilambarasanTR’s “ARASAN” will begin on November 24. 🎬
— The first schedule will take place in the outskirts of Chennai. 🏙️
— Simbu, #Samuthirakani, and #Kishore will take part in this initial shoot. 💪
— The team will kick off with… pic.twitter.com/f8Sd1a6jR5— Movie Tamil (@_MovieTamil) November 13, 2025
Also Read… ஊர்வசியில் அசத்தலான நடிப்பில் ஹாட்ஸ்டாரில் இந்தப் அப்பத்தா படத்தை மிஸ் செய்யாதீர்கள்