இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உண்மையானா ஹீரோ – ஸ்ருதி ஹாசன் புகழாரம்

Actress Shruti Haasan: தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் நடிகை மட்டும் இன்றி பாடகியாகவும் உள்ளார். இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உண்மையானா ஹீரோ - ஸ்ருதி ஹாசன் புகழாரம்

ஸ்ருதி ஹாசன், ஏ.ஆர்.ரகுமான்

Updated On: 

29 Jun 2025 21:46 PM

 IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன் (Actress Shruti Haasan). இவர் நடிகையாக சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பே தமிழ் ரசிகர்களிடையே பாடகியாக பரிச்சையம் ஆகிவிட்டார். தமிழ் மொழி செம்மொழி பாடல் ஆல்பத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் (Music Director AR Rahman) இசையமைத்து இருந்த நிலையில் ஒரு பகுதியை அதில் ஸ்ருதி ஹாசன் பாடி இருப்பார். அப்போதே இவர் கமல் ஹாசனின் மகள் என்றும் இவர் பாடகி என்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உண்மையான ஹீரோ என்று தெரிவித்தது கவனம் பெற்று வருகின்றது.

ஏ.ஆர்.ரகுமான் குறித்து நெகிழ்ந்து பேசிய ஸ்ருதி ஹாசன்:

நான் பொதுவாகவே ஹீரோக்களாக நினைப்பவர்களை நேரில் சந்திக்கவே பயப்படுவேன். ஆனால் எனது அந்த எண்ணத்தை முற்றிலுமாகா ஏ.ஆர்.ரகுமான் மாற்றிவிட்டார். மேலும் ரகுமான் சார் உடன் பணியாற்றும் போது நீங்கள் உங்கள் குடும்பத்தில் இருப்பது போலவே ஒரு உணர்வு தோன்றும் என்றும் அந்தப் பேட்டியில் நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

நான் ஹீரோக்களாக நினைப்பவர்களை சந்திக்க முயற்சி செய்ய மாட்டேன் எப்போதும். ஏன் என்றால் அவர்களை சந்திக்க முடியவில்லை என்றால் அந்த ஏமாற்றத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் சாரிடம் அது அப்படியே மாறாக இருக்கும். அவர் எப்பவும் என்னை வருத்தப்பட விட்டதில்லை. அவர் மிகவும் அன்பாகவும் கனிவாகவும் பழகக்கூடியவர் என்று நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் தக் லைஃப் படத்தில் ஸ்ருதி ஹாசன் பாடிய பாடல்:

தொடர்ந்து பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன் நான் எந்த இசையமைப்பாளருக்கு பாடல் பாடுகிறேன் என்றாலும் அவர்களுடைய ஸ்டூடியோவிற்கு சென்று அங்கு பாடலைப் பாடி கற்றுக்கொண்ட பிறகுதான் பாடலைப் பாடுவேன். ஆனால் ஏ.ஆர்.ரகுமான் சார் எனக்கு முன்பே பாடலை அனுப்பிவிட்டார் அது எனக்கு மிகவும் எளிமையான விசயமாக இருந்தது.

என் வீட்டில் அமர்ந்து என்னுடைய பியானோவைப் பயன்படுத்தி நான் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள இன்னும் எளிமையாக இருந்தது எனக்கு. இது அவருடைய தன்மையான குணத்தைக் காட்டுகிறது என்றும் நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்தப் பேட்டி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Related Stories
2025ல் டிரென்டிங்.. இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படத்தின் ட்ரெய்லர் எது தெரியுமா? முழு விவரங்கள் இதோ!
Jana Nayagan: லியோவை முந்திய ஜன நாயகன்.. டிக்கெட் முன்பதிவில் சாதனை.. வைரலாகும் பதிவு!
Suriya47: சிங்கம் இஸ் பேக்.. போலீஸ் அதிகாரி வேடத்தில் சூர்யா. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
DC Movie: லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ பட முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.. புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன்!
Kombuseevi: சரத்குமார் – சண்முக பாண்டியனின் அதிரடி கதையில்… கொம்புசீவி படம் எப்படி இருக்கு.. விமர்சனங்கள் இதோ!
கூட்டத்தில் பிரபல நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்கள்… விசாரணையில் இறங்கிய போலீஸ்!
பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கும் சாய் பல்லவி?
ஜிம்மில் பயிற்சி செய்தபோது திடீரென பார்வை இழந்த 27 வயது இளைஞர்