Thalaivar 173: மீண்டும் இணையும் ரஜினிகாந்த் – ஷோபனா கம்போ.. தலைவர் 173 படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

Rajinikanth And Shobana Reunion: நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகவுள்ள படம்தான் தலைவர் 173. இதை கமல்ஹாசன் தயாரிக்கும் நிலையில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடிகை ஷோபனா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Thalaivar 173: மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - ஷோபனா கம்போ.. தலைவர் 173 படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஷோபனா

Updated On: 

29 Mar 2026 15:50 PM

 IST

சினிமாவில் மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் (Superstar) என்றாலே முதலில் நினைவிற்கு வருபவர்தான் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 171 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் கூலி (Coolie). இதை பேமஸ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்தாக ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் பிசியாக இருந்துவந்தார். இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த நிலையில், இதன் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் இந்த படத்தை அடுத்ததாக டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி (Cibi Chakaravarthi) இயக்கத்தில் ரஜினிகாந்த் தலைவர் 173 (Thlaivar 173) என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இதை கமல்ஹாசனின் (Kamal Haasan) ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கிறார் என எதிர்ப்புறக்கப்பட்ட நிலையில், இதில் நடிகை ஷோபனா (Shobana) நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஜோடி ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் தளபதி (Thalapathy) என்ற படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: LIK படம் எப்போ ரிலீசாகும்?.. காமெடியாக படக்குழு வெளியிட்ட புரோமோ வீடியோ!

ரஜினிகாந்தின் தலைவர் 173 திரைப்படத்தின் கதைக்களம் மற்றும் நடிகர்கள் :

இந்த தலைவர் 173 திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் டெய்லர் மற்றும் ஆக்ஷன் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அவருக்கு ஜோடியாக நடிகை ஷோபனா நடிகிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. மேலும் ரஜினிகாந்தின் மகனாக நடிகர் பேசில் ஜோசப் நடிக்கிறாராம்.

இதையும் படிங்க: கதைக்காக அல்ல…தேதி கிடைக்கல – ஜி.வி.பிரகாஷ் தவறவிட்ட படங்கள் என்னென்ன தெரியுமா?

இப்படமானது கிட்டத்தட்ட விஜய்யின் லியோ படத்தின் கதையை போலவே அமைந்துள்ளதாம். லியோ படத்தில் விஜய் தனது குடும்பத்தை பாதுகாப்பதற்காக பல விஷயங்களை எதிர்கொள்ளும் நிலையில், அதை போலவே தலைவர் 173 பட கதையும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தலைவர் 173 திரைப்படம் குறித்து இணையத்தில் வைரலாகிவரும் பதிவு:

இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026 ஏப்ரல் 28ம் தேதியிலிருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது. மேலும் பஞ்சாப், அமிர்தசரஸ் போன்ற பகுதிகளில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படம் முழுக்க ஆக்ஷன் பொழுதுபோக்கு மற்றும் குடும்பம் என வித்தியாசமான ஸ்டோரியில் தயாராகவுள்ளது என கூறப்படுகிறது.

Follow Us
ரயில்வே கேட்டரிங்கு 10 லட்சம் அபராதம் .. ரயில்வே அதிரடி..
ஹோர்முஸ் கடல் பாதை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல அனுமதி - ஈரான் அறிவிப்பு
மெட்டா மற்றும் கூகுள் எதிராக பெண் தொடர்ந்த வழக்கு.. 6 மில்லியன் டாலர் பெண்ணுக்கு வழங்க உத்தரவு..
அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரித்த ஈரான் - அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு